உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 29 யாணியில் செலுத்துகிற கவனத்தைப் பேச்சில் செலுத்திட மாட்டார்கள். 'பானை உடைந்திருக்கிறதா இல்லையா என்பதைத் தட்டிப் பார்த்து அதன் ஒலியில் இருந்து அறிந்துகொள்வதைப் போல-மனிதன் அறிவாளியா அல்லவா என்பதை அவன் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளலாம்" என்று டெமஸ்தனீஸ் கூறியுள்ளதைப் பேச்சாளர்கள் மனத்தில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். 6 முன்பெல்லாம் நான் திருமண விழாக்களில் பேசும் போது வெளிநாட்டுச் சிறுகதையொன்றை எங்காவது ஒரு மணவிழா நிகழ்ச்சியில் சொல்வதுண்டு. அந்தக் கதையை மிக விரிவாக மெருகிட்டு நமது தாய்நாட்டுக்கு ஏற்றவாறு கூறுவேன். "ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந் தார்கள். ஏழ்மை அவர்களைத் தாக்கியது. பிழைப்புக்கு வழியின்றித் தவித்தனர். ஒருநாள் மனைவி, தன் கண வனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும் பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக் குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்கு மிங்கும் மிரண்டு ஓடியது. அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என் றான். அறிவிற் குறைந்த அந்தக் கணவன் மாட்டைக்