உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 33 நடைபெற்ற இரண்டு நாடகங்களை இங்கே இரண்டு விஷயங்களுக்காக நான் குறிப்பிட விரும்புகிறேன். வடசென்னைப் பகுதியில் நடைபெற்ற ஒரு நாடகம், கட்சித் தோழர்கள் தயாரித்து நடத்திய நாடகம். ஏழை களுக்காகப் பாடுபடக்கூடிய ஒருவன். அவன் ஊர் மடாதி பதியை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறான். ஏழைகள் பின்தொடர அந்த எழை பங்காளன் மடத்திற்குள் நுழைந்து, தங்க பீடத்தில் அமர்ந்திருக்கும் மடாதிபதி யைப் பார்த்துக் கோடையிடியென முழங்குகிறான். "உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கிடக்கும் எங்கள் தொழிலாளர் வர்க்கத்தைப் பாரும்; உண்டு ஊ ஊதி உப்பிக் கிடக்கும் உம்மைப் போன்ற மடாதிபதிகள் கொழுத்திட எங்கள் வியர்வை ஆறாக ஓட வேண்டுமோ?" . இப்படி உரை நிகழ்த்துகிறான். உணர்ச்சியுடன் ரசித்துக் கையொலி எழுப்பிட வேண்டிய அந்தக் கட்டத் தில் நாடகம் பார்த்திட அந்த மண்டபத்தில் குழுமியிருந் தோர் அனைவரும் ஏகடியமாகச் சிரித்துவிட்டனர். அண்ணாவும் புன்னகை புரிந்தவாறு என்னை நோக்கி னார். நான் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாமல் தவித் தேன். கையொலி பெறவேண்டிய சிரிப்புக்கு உள்ளானது ஏன் தெரியுமா? . வசனங்கள் கேலிச் ஏழை பங்காளன் எந்த மடாதிபதியைப் பார்த்து, "உண்டுஊதி-உப்பிக் கிடக்கிறாய்!" என்று சொன் னாரோ அந்த மடாதிபதி வேடம் போட்டவர் கொத்தவரங் காய் போன்ற உடல் படைத்தவர். கூனிக்குறுகி எலும்பும் தோலுமாய்க் காட்சியளித்தார். "உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கிடக்கிறோம்" என்று முழங்கியவரோ வாட்டசாட்டமாகவும் தொந்தியும் தொப்பையுமாகவும் சுமார் முந்நூறு பவுண்டு எடையுள்ளவராகத் தோற்ற மளித்தார். ஒன்று வசனத்தை மாற்றியிருக்க வேண்டும். அல்லது வேடத்திற்குப் பொருத்தமாக நடிகர்களையாவது மாற்றியிருக்க வேண்டும். Gu-3