உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 99 37 அவரது பேச்சில் அடுக்குச் சொற்கள் மிகுதியாக வந்து விழும். ஆனால், அந்தச் சொற்கள் எதுவும் பொருள் இல்லாமல் “அ” வுக்கு "அ" "க" வுக்கு "க” என்ற நிலை யில் கையாளப்பட்டதில்லை! "மாளிகையில் இருந்த நீதிக் கட்சியை மைதானத்திற்குக் கொண்டுவந்தவர் பெரியார்" என்று அண்ணா பேசுவதின் மூலம், அந்தக் கட்சி ஏழை எளியோர்களின் கட்சியாக மாற்றப்பட்டுவிட்ட வரலாற்று உண்மையை அடுக்குத் தொடரால் விளக்கிவிடுவார். மக்கள் உள்ளம் கவர்ந்திடுவார். அரசியலார் 144 தடைச் சட்டம் போடுவார்களே யானால் அதனை அப்படியே தகவலாகச்சொல்லித் தாக்கி டாமல் "நாகரீக நாட்களிலே நாக்கறுக்கும் சட்டமா?" என்று மேடையிலே கேள்விக்கணை பொழிவார். இதனைக் கண்ட சிலர், தாங்களும் பேச்சாளராக அடுக்குச் சொற் களைக் கோத்துப் பேசினால் போதுமெனக் கருதினர். பேசும்பொழுது அடுக்குச் சொற்களானாலும் அழகான தமிழானாலும் தானாக வந்து பொழிந்திட வேண்டுமே யல்லாமல் அவற்றைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்திப் பேச முனைந்தால் பேச்சுக் கலையில் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும். "அடக்கு முறைகளால் முடக்கி விடலாமெனத் துடுக்கு கொண்டு மிடுக்குடன் நடப்பது அடுக்குமோ என நான் ஆத்திரத்துடன் அரசாங்கத்தை அறைகூவல் விட்டுக் கேட்கிறேன்." இது அடுக்குச் சொல்லை மட்டும் நம்பிப் பேசுகிற பேச்சு! நான் முதலில் குறிப்பிட்டதைப்போல அண்ணா வுடன் ஒரு நாடகத்துக்குச் சென்ற நிகழ்ச்சி வேறொன்றை நினைவு படுத்துகிறேன். தாம்பரத்திற்கருகே நாடகம்! நாடகத் தலைப்பு, "மரணப் படுக்கையில்" என்பது! நாடக விளம்பரங்கள் "மரணப் படுக்கையில் அண்ணா" என்றே சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன. நாடகத்திற்கு அண்ணா தலைமை வகிப்பதைத்தான் அவ்வளவு அழகாக விளம்பரப்படுத்தி யிருந்தார்கள்.