9 சென்னை புரசைவாக்கத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டம். நானும் பேராசிரியர் அன்பழக னார் அவர்களும் கலந்துகொண்டோம். பேராசிரியர் பேச எழுந்தபோது அவரிடம் ஒரு பெண்மணி கைக்குழந்தை யொன்றைத் தந்து, பெயர் சூட்டும்படிக் கேட்டுக்கொண் டார். அது பெண் குழந்தை! பேராசிரியர் அதற்குக் "கருணாநிதி" என்று பெயர் சூட்டினார். கருணாநிதி என்ற பெயர் எல்லா மதத்தினருக்கும், ஆடவர்-பெண்டிர் இருபாலர்க்கும் பொருந்துகிற பெயர்! ஒரு காலத்தில் ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் திராவிடர் இயக்கம் வளர்த்த திரு. பாஸ்கரன் அவர்களின் துணைவியார் பெயர்கூட கருணாநிதிதான்! "கருணை- நிதி" அதாவது அருட் கருவூலம்-அல்லது அருட்செல்வம் -இப்பெயர் எம்மதத்திற்கும்-ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தக் கூடியதுதானே-அதனால் பேராசிரியர் சிரித் துக்கொண்டே, அந்தப் பெண் குழந்தைக்குக் " கருணாநிதி" என்று பெயர் வைத்ததும் கூட்டத்தில் குபீர் சிரிப்பு! பின்னர் அவர் பேசி முடித்தார்.நான் பேச எழுந்தேன். என்னிடமும் ஒரு தாய் தன்னுடைய பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து பெயர் சூட்டுமாறு கேட்டார். நான் அந்தக் குழந்தைக்கு "அன்பழகி" என்று பெயர் வைத்து-பேராசிரியர்மீது எனக்கிருந்த செல்லக் கோபத் தைத் தணித்துக் கொண்டேன். ஒரு பேச்சாளர் கூட்டங்களில் குழந்தைகளுக்குப்பெயர் வைப்பதில்கூட மிகுந்த கவனமாக இருக்கவேண்டும். ஒருவர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வருவார்! பெயர் வையுங்கள் என்பார்! இன்னாருடைய குழந்தைக்கு இன்ன பெயர் சூட்டப்படுகிறது என்று ஒலிபெருக்கியில்
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/42
Appearance