கலைஞர் மு.கருணாநிதி 51 சந்திரமண்டலத்தில் மனிதன் காலடிவைத்துத் திரும்பி வருகிற விஞ்ஞான உலகில் வாழுகிற நாம்; இன்னமும் குழந்தை வரம் வேண்டி அரச மரத்தைச் சுற்றுகிறோம்; இது அறியாமையல்லவா? எனக் கேட்பதற்கு விஞ்ஞானப் புதுமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பொருளாதாரம் பேசுகிறேன் என்று காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (கேபிடல்) என்ற நூலைப் பக்கம் பக்க மாகப் பொதுமக்கள் முன்னால் விவரித்துக் கொண்டிருந் தால்; இறுதியில் மேடையில் ஒலிபெருக்கியாளர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பார்கள். மார்க்ஸ் பிரித்துக் காட்டி யுள்ள வர்க்க பேதங்களை உணர்த்தி, தொழிலாளர் வர்க்கம் உலகாளவேண்டுமென்ற உணர்ச்சியை உரு வாக்க மட்டுமே பொதுக் கூட்டங்களில் பொருளாதாரப் பிரச்சினையை விளக்க வேண்டும். "காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான். அவன் காணத் தகுந்தது வறுமையா? பூணத்தகுந்தது பொறு மையா?'- புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடலில் எவ்வளவு பெரிய கேள்வி எழுகிறது! "காலுக்குச் செருப்புமில்லை— கால் வயிற்றுக் கூழுமில்லை; வீணுக் குழைத்தோமடா என் தோழா!" என்ற ஜீவாவின் பாட்டில் எத்துணை உருக் கமும் உணர்ச்சியும் பீறிட்டெழுகிறது! தொடர்புடைய ஒரு பேச்சில் இடையிடையே இது போன்றவைகளைக் கையாள்வதின் வாயிலாக மக்களைப் பேச்சாளர், தமது பக்கம் இழுத்துத் தனது கொள்கைகளை அவர்கள் இதயத்தில் ஏற்றிட முடியும். மக்களுக்குத் தெரிய வேண்டியவைகளை இந்த முறையில் அளவோடு பேசவேண்டும். அடுத்தது, மக்களுக்குத் தெரிந்ததைப் பேசுதல்! நீண்டகாலமாக ஒரு ஊரில் பள்ளிக்கூடமே இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆற்றைக் கடக்க மக்கள்
பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/53
Appearance