உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரிய சே.எண்... பேசும் கலை வளர்ப்போம் 1 ம்பத்தார். தென்னைக் கலையை வளர்ப்போம் என்றால், கலையைக் கலைக் காக வளர்ப்போம் என்ற பொருளில் சிலர் கருத்து அறிவிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல! 66 "கலை என்பது கலைக்காக" என்றால், விளக்கு என்பது விளக்குக்காக என்று மட்டுமேயென விவாதிப்பது போலாகிவிடும். விளக்கு ஒளி தருவதற்காக! அதைப் போலவே கலையும், சமுதாயத் துறையில் பொருளாதாரத் துறையில்-அரசியல் துறையில்-அறிவு ஒளியை, ஆராய்ச்சி ஒளியை, சிந்தனை ஒளியை, செய லாற்றும் ஒளியைத் தர வல்லதாகப் பயன்படுத்தப்பட வேண்டும். வீணை, யாழ், நாதசுரம் போன்ற இசைக் கருவி களில் கலையை மட்டுமே காணுகிறோம். ஆனால் இராக, தாள, பாவங்களுடன் இனிய குரலில் இசைவாணர் பாடுகிறார். அவரது இசைத் திறனை வியந்து பாராட்டுகிறோம். மண்டபத்தில் உள்ள நூற்றுக் கணக்கான தலைகள், தம்மை மறந்து ஆடுகின்றன. "ஆகா! சபாஷ்!" என்று ஒலிகள் எழுப்புகின்றன. அந்த இசை, வெறும் கலை நுணுக்கத்துடன் நின்று விடாமல் "வெண்ணிலாவும் வானும் போலே-வீரனும் கூர்வாளும் போலே - வண்ணப் பூவும் மணமும் போலே - கன்னல் தமிழும் நானும் அல்லவோ!" என்ற பாரதிதாச னாரின் பாடலாக இருந்தால் இசையைப் பருகுகிறோம்- அத்துடன் தமிழ் இன்பத்தைப் பருகுகிறோம் - கவிஞரின்