உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பேசும்கலை வளர்ப்போம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி 7 சினைகளைப் பற்றிக் கனிவுடனும் பேச வேண்டியிருக் கிறது; காரசாரமாகவும் பேச வேண்டியிருக்கிறது. உ கூட்டுறவு நிறுவன உறுப்பினர்களிடையே விவாதம் எழும்போது உண்மைகளை எடுத்து வைப்பது மட்டுமல்லா மல், அவற்றை வாதாடும் திறமையுடனும் நடத்திட வேண்டியிருக்கிறது. நேர்மையான ஒருவருக்காக வழக்கு மன்றத்தில் வாதாடுகிற வழக்குரைஞர் எவ்வளவு பெரிய சட்ட மேதை யாக இருந்தாலும் நியாயத்தை நிலைநாட்டப் பேச் சாற்றல் தேவைப்படுகிறது. இப்படியுள்ள பல்வேறு துறைகளைப் பற்றியும் விமர் சிக்கிற அரசியல்வாதிக்கு மேடையில் பேசிடும் கலை மிகமிகத் தேவையானது. எல்லாத் துறைகளின் பெயர்களையும் நான் இந்தத் தொடர் கட்டுரையின் முகப்பிலேயே கோடிட்டுக் காட்ட வில்லையென்றாலும்கூட, பல்வேறு பல்வேறு துறைகளிலும் தேவைப்படுகிற பேச்சுக்கலை குறித்து, பல செய்திகளை யும் விளக்கங்களையும் அளிக்க இருக்கிறேன். அவை உங் களில் பலருக்குப் பேச்சுப் பயிற்சியை வழங்கிட உதவு மென்று நம்புகிறேன். ஏற்கனவே பேச்சாளர்களாக இருக் கிற சிலருக்குத் தங்களின் குறைபாடுகளை நீக்கிக்கொண்டு மேலும் சிறந்த பேச்சாளராகத் திகழத் துணைபுரியும் என்றும் எதிர்பார்க்கிறேன். அத்தகைய நல்ல நோக்கத்துடன்தான் இந்தத் தொடர் கட்டுரை தீட்டப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மட் டுமே பயனடைய வேண்டுமென்றல்ல; பேச்சுக் கலையில் சிறந்து விளங்கவேண்டுமென்று விரும்புகின்ற இளந் தலை முறையினர் அனைவருமே இந்தக் கருத்துக்களைச் சிந்தித்