பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றானது உலகத்தை மட்டும் காக்கவில்லை. பிறந்த உயிர்கள் அனைத்திற்கும் பெருந்துணையாக பேராதரவாக அல்லவா இருந்து காக்கிறது! இவ்வாறு காற்றைப் பிடித்துக் கட்டிக் காக்கும் நமது மாண்புமிகு உடலின் அமைப்பையும் பாருங்கள் நன்கு புரியும். இந்த உலகத்தின் அமைப்பைப் போலவே, நமது உடம்பின் அமைப்பின் உள்ளும் புறமும் உருவமைக்கப்பட்டிருக்கிறது. பூமி, தண்ணிர், தீ, காற்று, ஆகாயம் என்பது உலக அமைப்பு. இதைப் பஞ்ச பூதம் என்று பெருமைப்படப் பேசுவார்கள். இதே அமைப்புதான் நமது மனித உடலிலும் இருக்கின்றது. 1. பூமியின் கூறு 5 என்பர் : அது போலவே நமது உடலிலும் மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை என உள்ளது. 2. அப்புவின் கூறு (நீர்) 5 என்பர். அவை நீர், உதிரம், விந்து, மூளை, மஜ்ஜை என்பவையாகும். 3. தேயுவின் கூறு (தீ 5 என்பர். அவை ஆகாரம், நித்திரை, பயம், மைதுனம் (உடல்உறவு) சோம்பல் - 4. வாயுவின் கூறு 5 என்பர். அவை குரோதம், லாபம், மோகம், மதம், மாற்சரியம் போன்றவை. பூமியின் அமைப்பிலே உள்ள பொருட்கள் போல, உடலின் ஆதாரங்கள், நீரின் இயல்பும் இயக்கமும் போல, உடலின் நீர் இரத்தம் போன்றவை. தீயாக இருப்பது போல, தேகத்தில் தகிக்கும் தீயும். காற்றின் இயல்பு போல மனித உடலும் ஒடி நடந்து நின்று இருந்து கிடக்கும். ஆகாயத்தின் இயல்பு போல, பலவித மனோபாவங்களால் குணநலன்களால் குழுமிக் கிடக்கின்றன. குதர்க்கத்தால் தவிக்கின்றன. இப்படி, உலகத்திற்கு இணையாக, உடலை உவமித்துக்காட்டி, அதன் உயிர்ப்புத்தன்மையை சிறப்பித்துக் காட்டுகின்றார்கள் சித்தர் பெருமக்கள்.