பக்கம்:பேரின்பம் தரும் பிராணாயாமம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது மன மகிழ்ச்சிக்கு நமது செயல்கள்தான் முககியம. மற்றவர்களை எதிர்பார்ப்பதும், ஏக்கத்துடன் தேடுவதும், அவர்கள் இல்லையென்றால் அழிந்து போவோம் என்று அங்கலாய்ப்பதும் ஒருவரை தன்னம்பிக்கை இழக்கச் செய்கிறது. தனியே செயல்புரியும் தனித்தன்மையை துடைத்து விடுகிறது. இனிமேல் நான் அவ்வளவுதான் என்ற ஒரு முடிவுக்குக் கொண்டு போய்விடுகிறது. இந்த மாதிரி நினைவுகளிலிருந்து விடுவித்துக் கொள்ளவே, இந்தக் கவிதை வரிகள் கைகொடுத்து உதவுகின்றன. ‘என்றைக்கும் நானே எனக்குத் துணை' என்பது தான் நீங்கள் உங்களைப்பற்றி புரிந்து கொள்ள வைக்கும் நிதர்சனமான வரிகள். தனியே இருப்பது தவிப்பை உண்டாக்கும். நினைவுகளில் தணலை உண்டாக்கும். துணையாய் இருப்பது என்றால் துணிச்சல் உள்ளவர்களுக்கு மட்டுமே இருக்கும் என்ற எண்ணங்களை இன்றோடு மறந்து விடுவோம். பெட்டியில் இருந்தால் தான் பணத்தை எடுக்கலாம். மலர்கள் இருந்தால் தான் மாலைகளைத் தொடுக்கலாம். அதுபோலவே சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் அள்ளலாம். சட்டி என்பது தேகம். அகப்பை என்பது மனம். தேகம் வலிமையாக இருந்தால் தான் மனம் வலிமையாக இருக்கும். வலிமையான உடலும் மனமும் தான் வாழ்வை துணிச்சலுடன் சந்திக்கும். வாழ்வாங்கு வாழ்கிற முறைகளை சிந்திக்கும். இப்படி பேரின்பமான மனதைப் பெற, பெருமிதமான உடலை வளர்க்க உதவுவது பிராணாயாமம் தான். பிராணாயாமம் என்பது யோகிகளின் காரியம் என்று பல போகிகள் கூறப்போய், போகிகள் ரோகிகளாக மாறி, வாழ்வின் இழிந்த நிலைக்கு ஒடுகின்ற வேகிகளாக ஆனார்கள். பிறகு சோகிகளாகவும் சிதைந்தார்கள். மறைந்தார்கள்.