உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ஆற்றில் அருக்காணித் தங்கம் ஆரிச்சம்பட்டியை நோக்கிப் புறப்பட்ட ரத வண்டி; செல் லாண்டியம்மன் கோயில் திருவிழாப் பந்தலை விட்டு வேக மாகக் கிளம்பியது. அந்த வண்டியில் முன்னிருக்கையில் வையம் பெருமான் அமர்ந்திருந்தான். அடுத்த வரிசையில் சிலம்பாயி யும் அவளுக்கு இருபுறமும் முத்தாயி பவளாயியும் வீற்றிருந்த னர். காவிரிக்கரையோரமுள்ள கரடுமுரடான சாலையில் குளித்தலை வழியாக வந்து தென் கிழக்குத் திசையில்தான் ஆரிச்சம்பட்டியெனும் மணியங்குரிச்சிக்குச் செல்லவேண்டும். தனது அண்ணன் மக்களை அருகே வந்து வழியனுப்ப இயலாவிடினும் விழாப் பந்தலுக்குள்ளிருந்தவாறு தாமரை நாச்சியார் உள்ளத்தால் வாழ்த்திக் கொண்டு, ரத வண்டி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஓவியங்கள் உயிர் பெற்றது போன்று அழகுக் காவியங்களாய்த் திகழும் முத்தாயி, பவளாயி இருவரும் தாமரைநாச்சியாரின் கண்களை விட்டு அகலவில்லை. பந்தலை விட்டு அந்த ரத வண்டி தொலை தூரம் சென்ற பிறகும் அந்த இளங்கிளிகளின் முகம் தாமரை நாச்சியின் முன்னால் தோன்றி கொத்துப்புன்னகையை கொற்கை முத்துப்புன்னகை என உதிர்ப்பது போல் இருந்தது. தாமரையின் மனத்திரைக் காட்சி, அவளது முகப்பொலிவை மெருகூட்டிக் காட்டியது என்றாலும் திடீர் மின்னலாக ஒரு வேதனை ரேகை அந்தப் பொலிவைக் கிழித்துக் கொண்டு கிளம்பியது. நெல்லியங்கோடனை மணந்தபோது ஆரிச்சம் பட்டியில் தனக்கும் தனது அண்ணனுக்கும் நடைபெற்ற சூடான உரையாடல் அவளது நினைவு அலைகளில் மிதந்து குலுங் கியது. அண்ணா! என் சகோதரனான உன் முன்னால் என்னைப் பெற்றெடுத்த என் தாயின்மேல் ஆணையாக - தந்தை மேல் ஆணையாகச் சொல்கிறேன் பந்தபாசம் இன்றுடன் முடிந்து 92 -