உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் கொங்குச் சீமையின் பண்பு விளங்க தாமரைநாச்சியார், தனது கணவனைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன் னாள். ஆமாம் அதுதான் நல்லது. வாருங்கள்" என்று மாய வரைக் குன்றுடையான் அழைக்கவே அவரும் அந்த மண்ட பத்துக்குச் சென்றார்; செல்லாண்டியம்மனைப் பற்றியும் பெரிய காண்டி அம்மனைப் பற்றியும் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபமாக அது இருந்தது. கரகம் விடும் விழாவைப் பற்றி ஓடக்காரன், பொன்னர் - சங்கருக்குச் சொன்ன கதை முழு தும் சித்திரங்களாக அந்த மண்டபத்தில் தீட்டப்பட்டிருந்தன. கைலாசமலையில் நாக கமலையென்ற பகுதி சித்திரத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. அடுத்த ஓவியமாக ஒரு ஐந்து தலைப் பாம்பு சிவனை நினைத்து கடுந்தவம் செய்து கொண் டிருப்பது போல் எழுதப்பட்டிருந்தது. பிள்ளை வரம் கேட்டு அந்த நாகம் தவம் செய்தது. அடுத்த படத்தில் பரமசிவனும் பார்வதியும் இருந்தார்கள். ஐந்து தலை நாகத்திற்குப் பிள்ளை யாகப் பிறக்க பார்வதி ஒப்புக் கொண்டு புறப்படுவது போல ஒரு சித்திரம் இருந்தது. பார்வதியைப் பரமசிவன் விடை யளித்து அனுப்புகிற காட்சி ஒரு படத்தில் இடம் பெற்றிருந் தது. அடுத்த ஓவியம், ஐந்து தலை நாகம்; ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது போல! அடுத்த ஓவியத்தில் அந்தக் குழந்தை பெரியகாண்டி அம்மனாக வளர்ந்து காட்சி தருவது போல! அடுத்ததாக பெரியகாண்டி தனது வியர்வையை விரலால் வழித்தெறிய அதிலிருந்து ஏழு கன்னியர்கள் தோன்றுவதாக ஒரு ஓவியம்! பெரியகாண்டியம்மன் வாழவந்திச் சீமைக்கு வருவதாக ஒரு காட்சி! பிறகு தொட்டியம் வழியாக காவேரி யைக் கடக்க பெரியகாண்டி பூஜை செய்ய முடிவு செய்வதாக வும் அதற்கு கரகம் வேண்டுமென்றும் கன்னியர்களை அனுப்பு கிற படம்! ஒரு மண்ணுடையான் கன்னியரிடம் கரகம் இல்லை யென்று பொய் சொல்லுகிற ஓவியம்! பொய் சொன்ன மண் ணுடையான் வீட்டில் உள்ள எல்லாக் கரகங்களிலும் பாம்பு நெளியுமாறு பெரியகாண்டி சபிப்பது போல ஒரு பெரிய ஓவியம்! மண்ணுடையான் பெரியகாண்டியிடம் மன்னிப்புக் கேட்டு மண் கரகம் ஒன்று கொடுக்கும் ஓவியம்! ஓடக்காரன் ஒருவன் ஏழு கன்னியரைக் கேலி செய்வது போல ஒரு படம்! அது கண்டு பெரியகாண்டி அவன் ஓடத்தைத் தீப்பற்றி எரியச் செய்யும் ஒரு படம்! பிறகு பெரியகாண்டியும் செல்லாண்டி யம்மனும் பந்தயம் போட்டுக் கொண்டு மண் கரகம் பொன் கரகம் விடுகிற படம்! இரு அம்மன்களும் சமாதானமாகிற 98