உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பொன்னர்-சங்கர் தலைதூக்கி அண்ணாந்து பார்க்கிற அளவுக்கு சுண்ணாம்புச் சாந்து குழைத்து கட்டப்பட்டிருந்த ஒரு சிறு மாளிகை போன்ற மலைக்கொழுந்தாக் கவுண்டர் வீட்டு வாசலில் பிரம்மாண்ட மான கொட்டகைப் பந்தல் ஒன்று போடப்பட்டிருந்தது. அந் தப் பந்தலை அழகுபடுத்தும் வேலையில் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆட்கள் பம்பரம் போலச் சுழன்று கொண்டிருந்தனர். பரபரப் புடன் நடைபெறும் அந்தப் பணிகளை வீட்டு முகப்பில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு மலைக்கொழுந்தாக் கவுண்டர் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் காலடியில் அமர்ந்து பெருமாயி அம்மாள், வெற்றிலை மடித்துக் கணவருக்கும் கொடுத்து, தானும் தாம்பூலத்தைக் குதப்பியவாறு, மறுநாள் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி யால் முகத்தை நிரப்பிக் கொண்டிருந்தாள். அந்த வீட்டுக்கு அருகாமையில் - குளக்கரையையொட்டி ஒரு நீண்ட பந்தல்; அந்தப் பந்தலில் மேள ஒலி கேட்டுக் கொண் டிருந்தது. பந்தலின் கொடுங்கைகளையொட்டிப் பனையோலைக் கூந்தல்கள் மிகநெருக்கமாகப் பின்னித் தொங்க விடப்பட்டி ருந்தன. பந்தல் கால் ஒவ்வொன்றிலும் ஈச்சங்குலைகள், மாங் கொத்துகள். பந்தல் நீளத்துக்கு ஒரு பெருங் கூட்டம் ஒவ் வொருவராக வரிசையாக நின்று கொண்டிருந்தனர். அவர் களின் எண்ணிக்கை ஆயிரம் பேருக்குக் குறையாமல் இருக்கும். அனைவருமே அழுக்கான அல்லது கிழிந்து நைந்து போன ஆடையுடுத்திய ஆண்கள், பெண்கள் ஏழை எளியோர்! - அவர்களது கண்களிலே ஒரு ஆவல் பந்தலின் நடுவே சற்று உயரமாகப் போடப்பட்டிருந்த மேடையையே அந்தக் கண்கள் மொய்த்தன. காரணம்; அந்த மேடையிலேதான் அவர்களுக்கு அளிக்கப்பட இருக்கும் உணவு தானியங்கள் பெரிய பெரிய கூடைகளில் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. - - - அந்த உணவு தானியங்கள் அரிசியாக வரகாக கம்பாக சோள்மாக இப்படிப் பலவகையாக அந்த மேடையில் குவிந்திருப்பதும்; அவற்றைத் தங்களுக்கு இனாமாக அள்ளி வழங்க இருப்பதும் - தரித்திரநாராயணர்களுக்குத் தாங்கொணாத மகிழ்ச்சியைத் தரக் கூடிய விஷயம்தானே! மூன்று நாள் விழா அதிலே இப்போது நடப்பது இரண் டாம் நாள் விழா - நாளைக்கு மூன்றாவது நாள் விழாதான் இந்த விழா நிகழ்ச்சிக்கே முத்தாய்ப்பு வைக்கும் விழாவாக 2