உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் எதுவும் பேசவில்லை! வண்டியிலிருந்த வையம்பெருமான் தனது வாளை உருவிக்கொண்டு கீழே பாய முனைந்தான். தன் தாயாரையும், சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டும்; அல்லது அந்த முயற்சியில் செத்து மடிய வேண்டும் என்ற ஒரே உறுதியுடன் சிங்கக் குட்டி போல் சீறிய அவனைச் சிலம் பாயி தடுத்து வண்டிக்குள் தள்ளத் தன் பலம் முழுவதையும் உபயோகித்தாள்; அவனோ அன்னையை மீறிக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கி விட்டான். "வேண்டாம் அண்ணா! வேண்டாம்! என்று அலறியவாறு அவன் தங்கைகள் இரு வரும் அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட னர். அவர்களை உதறி விட்டு அவன் தங்கள் மீது பாய்ந்திடக் கூடும் என எதிர்பார்த்து; குதிரையில் இருந்த வீரர்கள் அனை வரும் தங்கள் கைகளில் இருந்த வேல்களையும், வாட்களையும் ஓங்கியவாறு அந்த வண்டியை மேலும் நெருக்கமாகச் சுற்றி வளைத்தனர். 120