உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - யொன்று! அந்தப் பாறையை ஒட்டினாற் போல ஓர் ஆழ மான குழிப்பள்ளம் அந்தப் பள்ளம் தெரியாத அளவுக்கு புதரின் இலைதழைகள் மறைத்துக் கொண்டிருப்பதை - அந்தப் பாறைக்கருகே இருந்து வையம்பெருமானைத் தாக்கிக் கொண் டிருந்த எதிரிகள் பார்த்து விட்டனர். அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு வையம்பெருமானுடன் சண்டை யிட்டுக் கொண்டே பின் வாங்குவது போல மெல்ல மெல்ல அவர்கள் நகர்ந்தனர். ஆவேசத்திலும் ஆத்திரத்திலும் பாய்ந்து பாய்ந்து அவர்களைத் தாக்கிக் கொண்டிருந்த வையம்பெரு மான் தனக்கு முன்னேயிருந்த குழிப்பள்ளத்தை அந்த வேகத் தில் கவனிக்காமல் இரண்டு கால்களையும் அதில் வைத்து விட்டான். அடுத்த கணம்: குழிப் பள்ளத்தில் சிறைப்பட்டவனைப் போலச் சிக்கிக் கொண்டான். கையிலிருந்த வாளுடன் மேலே தாவினான்; முடியவில்லை! அதற்குள் அவனிடமிருந்த வாளை அந்த முரட்டு வீரர்கள் பறித்துக் கொண்டனர். அது மட்டுமா? அவனது இரு கரங்களையும் அழுத்தமாகப் பிடித்து அவனைக் குழிப்பள்ளத்திலிருந்து வெளியே கொண்டு வந்தனர். அய்யோ! அவனைக் கொன்று விடாதீர்கள்!" என்று கத்திக் கொண்டே சிலம்பாயி அருகே ஓடி வந்தாள். 'உங்கள் மகனுக்கு மட்டுமல்ல; உங்களில் யாருடைய உயி ருக்கும் எங்களால் ஆபத்து வராதம்மா!" என்று ஒரு கம்பீர மான குரல் கேட்டது. குரல் வந்த திசையை வையம்பெரு மானும் சிலம்பாயியும் கூர்ந்து நோக்கினர். தன் பக்கமிருந்த வீரர்களை விலக்கிக் கொண்டு மாமிசமலை போலிருந்த ஒரு மொட்டைத் தலை மனிதன் நெருங்கி வந்தான். அவன் கையில் ரத்தம் தோய்ந்த வாள் இருந்தது. ரதவண்டியின் இருபுறங்களி லும் மாட்டப்பட்டிருந்த தீவட்டிகளின் வெளிச்சத்தில் அவ னைப் பார்க்கவே பயந்து முத்தாயி, பயந்து முத்தாயி, பவளாயி இருவரும் முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அந்த மாமிச மலை; தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். 15 'என்னைத் தெரியவில்லையா? நான்தான் திருமலை! ராச் சாண்டார் திருமலையின் காவலன்! தலையூர் மன்னர் காளி யின் தளகர்த்தர்களில் ஒருவன்! ராச்சாண்டார் திருமலை எனது பொறுப்பில் இருப்பதால் தலையூர் மன்னர் என் பெய 122