உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. " கலைஞர் மு.கருணாநிதி தைரியம் அந்தப் பெண்களின் முகத்தில் ஒளி விட்டது. உயிரை விடுத்து மானத்தைக் காத்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட எவருக்கும் ஏற்படக் கூடிய நெஞ்சத் துணிவே அவர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. வையம்பெருமானின் கைகால் களிலும் இரும்பு வளையங்கள் பூட்டப்பட்டன. அதுவும் போதாதென்று சங்கிலியால் பிணைக்கப்பட்டு ரத வண்டியில் ஏற்றப்பட்டான். செல்லாண்டியம்மன் கோயிலில் இருந்து குளித்தலைப் பாதையாக ஆரிச்சம்பட்டிக்குச் செல்வதற்கு நங்கவரம், பனை யூர் ஆகிய ஊர்களைக் கடக்க வேண்டும். ஆரிச்சம்பட்டியி லிருந்து ராச்சாண்டார் திருமலை என்கின்ற அந்த ஊர் சில கல் தொலைவுதான் என்றாலுங்கூட தலையூர்க்காளியின் தள கர்த்தனான திருமலை ஆரிச்சம்பட்டியைக் கடந்து ராச்சாண் டார் மலைக்குச் செல்ல விரும்பவில்லை. தொலைவு அதிக மானாலுங்கூட குளித்தலைப் பாதையிலிருந்து வேறு வழியா கத் தோகைமலை சென்று அங்கிருந்து ஆரிச்சம்பட்டி செல்லா மலே ராச்சாண்டார்மலைக்கு அவர்களைக் கொண்டு போகவே திட்டம் போட்டிருந்தான். ஆரிச்சம்பட்டியைக் கடப்பதாக இருந்தால் சின்னமலைக் கொழுந்துவின் படை பலத்தை அங்கே சமாளிக்க வேண்டியிருக்கும். அதனால் அவர்கள் கண்ணில் படாமலேயே ராச்சாண்டார்மலைக்குப் போய் விடுவதென முன்கூட்டியே செய்த ஏற்பாட்டை செயல்படுத்தத் திருமலை கட்டளையிட்டான். ரதவண்டியை ஓட்டுவற்குத் திருமலை வேறு ஒரு ஆளைப் பணித்தான். திட்டமிட்டபடியே எல்லாம் நடந்தது. ரத வண்டியும், அதைச் சுற்றி வீரர்களும் தோகை மலைப்பாதையில் புறப்பட, அதற்குத் தலைமைவகித்து ஒரு குதிரையில் அமர்ந்து முன்னே சென்று கொண்டிருந்தான் தளகர்த்தன் திருமலை! இருதரப்பிலும் காயமுற்றவர்கள்; பெரும்பாலும் ஆரிச்சம் பட்டி வீரர்கள் குற்றுயிரும் குலை உயிருமாக அந்தப் பாதை யோரத்திலும் -பாறை அருகிலும் முனகிக் கொண்டு புரண்ட படி இருந்தனர். உயிரற்று அசைவற்றுப் போன உடல்களும் சிதறிக்கிடந்தன. இருளில் அந்தச் சாலையில் உருண்டு கொண் டிருந்த வீரர்களில் ஒருவன், தனது விலாப்புறத்தில் ரத்தம் கொட்டிக் கொண்டிருப்பதையும் ஒரு கட்டாரி ஆழமாகக் குத்திக் கொண்டிருப்பதையும் பற்றிக் கவலை கொள்ளாமல் மெல்ல ஊர்ந்து ஊர்ந்து பாறையின் ஓரத்தில் களைப்புற்று நின்று கொண்டிருந்த ஒரு குதிரையின் அருகே வந்து கொண் டிருந்தான். அவன் ஆரிச்சம்பட்டியைச் சேர்ந்த வீரன்தான் = - 127