உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரப்படை 15 சின்னமலைக்கொழுந்தின் ஆர்ப்பரிப்பைத் தொடர்ந்து ஆரிச் சம்பட்டிக் கோட்டையின் முகப்பு முரசம் முழங்கிற்று. அந்த முரசம் ஒலித்தாலே அரண்மனையின் அவசர அழைப்பு என்று தெரியுமாதலால் பாசறைகளில் ஓய்வு கொண்டிருந்த வீரர் களும், போர் நேரங்களில் மற்றும் படையில் இணைந்து பணி யாற்றும் அந்தப் பகுதியின் வீர வாலிபர்களும் கச்சை கட்டிக் கொண்டு படைக்கலன்களை ஏந்தியவாறு கோட்டை வாசலில் குழுமிவிட்டனர். அணிவகுத்து நிற்கும் அவர்கள் அனைவரும் காணத்தக்க வகையில் அந்த முகப்பின் முன்னே கருங்கற்களால் கட்டப் பட்டிருந்த உயர்ந்ததோர் பீடத்தில் சின்னமலைக்கொழுந்து ஆவேச உருவமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தார். வரிசை யாக எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீரர்கள் ஏந்தியிருந்த ஈட்டிகளின் முனைகளும், வாட்களின் கூர்மையும், கேடயங்களின் முன் பகுதிகளும் பளபளவென மின்னிக் கொண்டிருந்தன! சின்னமலைக் கொழுந்து, அகன்று நீண்டதோர் கனமான வாளைத் தனது வலது கையில் ஓங்கிப் பிடித்தவாறு சூழ்ந்து நிற்கும் படையினரைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். சினம் பொங்கும் எரிமலையாக மட்டுமல்லாமல் - தனது மனைவி மக்களுக்கு ஏற்பட்டு விட்ட பேராபத்தின் காரண மாகவும்; ஆரிச்சம்பட்டிக்கு விடுக்கப்பட்ட அறைகூவலின் காரணமாகவும்; நொறுங்கிப் போயிருந்த அவரது நெஞ்சி லிருந்து புறப்பட்ட வார்த்தைகள், தணலாகவும் - தழுதழுத்த நிலையிலும் வந்து விழுந்தன! நெல்லிவளநாட்டுச் செல்லாத்தாக் கவுண்டர் ஆரிச்சம்பட்டி யுடன் மோதுவதென்று தீர்மானித்து விட்டார். தலையூர்க் 130