உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் கொண்டு வஞ்சம் தீர்ப்பதற்கு சமயம் பார்த்திருக்கிறார் செல் லாத்தாக் கவுண்டர் என்பது எனக்குத் தெரியாமலே போய் விட்டது! தெரிந்திருந்தால் செல்லாண்டியம்மன் கோயில் திரு விழாவிலிருந்து என் குடும்பத்தார் திரும்பி வருவதற்கு ஒரு பெரும் படையையே பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருப்பேன். இதோ நிற்கிறார்களே இந்த இளம் சிங்கங்கள் இவர்கள் பெயர் எனக்குத் தெரியாது; ஆனால் என்றைக்குமே மறக்க முடியாதவர்கள் - கரகம் விடும் விழாவில் என் பெண்களைக் காவேரியாற்றுக்குப் பலியாகாமல் காப்பாற்றியவர்கள் இவர் - களை அழைத்துக் கொண்டு நான் முன்னதாக அரண்மனைக்கு வந்து விட்டேன். விழா முடிந்து அம்மனை தரிசித்து விட்டு அரண்மனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த என் மனைவியையும், மகன் வையம்பெருமானையும், பெண்கள் முத்தாயி பவளாயி யையும் குளித்தலைக்கருகே வழி மறித்து வேறு பாதையில் ராச்சாண்டார் திருமலைக்குக் கொண்டு போய் விட்டார்கள் தலையூர்க்காளியின் ஆட்கள்! அவர்களை எதிர்த்துப் போரிட்டு நமது வீரர்கள் பிணமாகி விட்டார்கள். எஞ்சிய ஒரு வீரன் படுகாயத்துடன் இங்கே வந்து செய்தியைக் கூறி விட்டு அவ னும் வீர மரணமடைந்தான். தலையூர்க்காளியின் தளபதி திருமலை அறிவித்துள்ள திட்டப்படி என் குடும்பத்தார் ராச் சாண்டார் மலையில் சிறைவைக்கப்படுவார்கள். மாந்தியப்ப னுக்கும் என் பெண்களுக்கும் கட்டாயக் கல்யாணம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதற்கு என் பெண்களோ, என் மனைவியோ, என் மகனோ சம்மதிக்கப் போவதில்லை! அந்தத் திருமணத்தை விடத் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போவதைத்தான் அவர்கள் விரும்புவார்கள். போது நான் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். அதற்காகத் தான் உங்களை அழைத்திருக் கிறேன், சமாதானமாகப் போய்விடுவோம்; நீங்கள் கோரிய படி என் பெண்களை மாந்தியப்பனின் மனைவிகளாக்கு கிறேன் என்று செல்லாத்தாக் கவுண்டருக்கு ஓலை அனுப்பச் சொல்கிறீர்களா? அல்லது எது நேர்ந்தாலும் சரியென்று அவர் களோடு மோதச் சொல்கிறீர்களா? பணிந்து போவதா? படை யெடுப்பதா?' இப் சின்னமலைக்கொழுந்து விளக்கமளித்து; இறுதியாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டவுடன் சூழந்திருந்த ஈட்டிகளும் வாட்களும் விண்ணோக்கி உயர்ந்து ஆடின! படையெடுப்போம்! பணிய மாட்டோம்! என்று ஒருமித்த குரல் ஓங்காரக் குரலாகக் கிளம்பியது. 132