உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்முறை புத்து2 16 தங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆரிச்சம்பட்டி வீரர்களை நோக்கிப் பொன்னர் உரத்த குரலெடுத்துப் பேசினான். 86 'வீரர்களே! அப்படியே நின்று கேடயங்கள் கொண்டு அம்பு களைத் தடுத்திடுங்கள்! எதிரிகளிடமுள்ள அம்புகளில் பெரு மளவு தீர்ந்த பிறகே நமது எதிர்ப்பு தொடங்க வேண்டும்! அதுவரையில் எதிர்ப்பைத் தடுக்கவும் தாங்கிக் கொள்ளவும் மட்டுமே நமது வலிமையைப் பயன்படுத்த வேண்டும்.' பொன்னரின் இந்த யோசனை ஆரிச்சம்பட்டி வீரர்களுக்குப் புதுமையாக இருந்தது. எதிரி மோதும்போது பதிலுக்கு நாமும் உடனடியாக மோதுவதை விடுத்து எதிரியின் பலத்தைப் பாதி யளவாகக் குறைக்கிற அளவுக்குக் களைப்புறச் செய்து அதன் பிறகு எதிரியைத் தாக்கும் போர்முறை கற்ற பொன்னரும் சங்கரும் கூறிய யோசனையின் உட்பொருள் முதலில் புரியா விட்டாலும்; தளபதியின் கட்டளையென்ற முறையில் ஆரிச்சம் பட்டி வீரர்கள் அதற்குக் கட்டுப்பட்டுச் செயல்பட்டனர். ராச்சாண்டார்மலைக் கோட்டைக்குள்ளிருந்து தலையூர்க் காளியின் தளபதி திருமலை, தனது வீரர்களுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்தான். திருமலைக்குப் பக்கத்தில் கையில் ஒரு மதுக்கிண்ணத்துடன் மாந்தியப்பன் அட்டகாச மாகச் சிரித்தவாறு மதுவைக் கொப்பளித்துக் கொப்பளித்து விழுங்கிக் கொண்டிருந்தான். இருவரும் அமர்ந்து வீரர்களுக்கு ஆணையிட்டுக் கொண்டி ருந்த இடத்திற்கு அருகாமையில் ஆடம்பரமாக அலங்கரிக்கப் பட்டிருந்த அறையொன்றில் வையம்பெருமான் கனத்த சங்கிலி களால் பிணைக்கப்பட்டு ஒரு பெரிய தூணில் கட்டப்பட்டிருந் தான். அவனை யாரும் நெருங்க முடியாதபடி இரண்டு முரட்டு 138