உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் ஆரிச்சம்பட்டி வீரர்கள் முன்னேறி வரவே இல்லை! அப் படி அப்படியே குதிரைகள் மீது நின்ற இடத்திலே நிற்கின்ற னர்! புற்றீசல் போலப் புறப்பட்டு செல்லும் நமது அம்பு களைக் கேடயங்களால் தடுத்திட மட்டுமே அவர்களால் முடி கிறது!" என்றனர் அந்த வீரர்கள்! மதுவுண்ட வெறியில் மாந்தியப்பன் சபாஷ்!' எனக் கத்திக் கடகடவெனச் சிரித் தான். ஓநாய் போல பயங்கரத்தொனியில் கத்தினான். பயல்கள் நடுங்கிப் போயிருப்பார்கள்! ஒரு அடி கூட முன்னால் எடுத்து வைக்க முடியாமல் திணறிப் போயிருப்பார் கள்! தளபதி திருமலையா கொக்கா? இதோ நான் வருகிறேன். கோட்டைக் கொத்தளத்தின் சாளரத்தின் வழியாக அந்தப் பரிதாபக் காட்சியைப் பார்த்துக் களிக்கிறேன் என்று கூறி, திருமலையின் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டு - மாந்தி யப்பன் அங்கு வந்த வீரர்களில் இருவரை அழைத்துக் கொண்டு கொத்தளத்தின் முகப்பு நோக்கிச் சென்றான். பலகணியை விடச் சற்று சிறியதாகவும் உள்ளிருந்து வெளியே பார்த்தால் பரந்த வெளிப்புறம் தெளிவாகத் தெரியக் கூடிய தாகவும் அமைக்கப்பட்டிருந்த அந்த சாளரத்தின் வழியே விழி களைச் செலுத்திய மாந்தியப்பன் சற்று வியப்புற்றுத் திகைப் படைந்தான். ஆரிச்சம்பட்டிப் படைகளின் அணி வகுப்புக்கு முன்னால் சின்னமலைக்கொழுந்தும், அவருக்கு அருகே ஆற்றில் குதித்து முத்தாயி பவளாயி இருவரையும் காப்பாற்றிய அந்த வாலிபர் கள் இருவரும், அவர்களுடன் மற்றொரு வீரனும் அவன் கண் களில் தென்பட்டதே அந்தத் திகைப்புக்குக் காரணம்! சூறா வளிக் காற்றையும் பொருட்படுத்தாமல் அவர்கள் புரிந்த சாக சம்; மலைப்பாம்பு, முதலைகளுடன் அவர்கள் நடத்திய மர ணப் போராட்டம்...! இவையெல்லாம் அவன் நினைவுக்கு வரவே, திருமலையின் படை பெரியதாயினும் நெஞ்சுரம் கொண்ட அவர்கள் முன்னால் தாக்குப் பிடிக்க முடியுமா? என்ற சந்தேகமும் அவனை ஆட்கொண்டது! ஆரிச்சம்பட்டிப் படையினரை விடுத்து விழிகளைத் திருப்பி. நிமிர்ந்து நின்று யோசித்துக் கொண்டிருந்த மாந்தியப்பனிடம் அவனது பணியாள் மற்றொரு மது நிறைந்த கிண்ணத்தை நீட்டினான். அதனை அவன் வயிற்றுக்குள் அனுப்பிய சில நொடிகளில் அவனுக்குத் திடீரென ஏற்பட்ட அச்சம், ஐயம் எல்லாம் பறந்தோடிப் போயின. மதுவின் கிறுகிறுப்பு அவன் 140