உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் 44 "என்னடி தாமரை! இன்னைக்கே ரொம்ப களைச்சுப் போய்ட்டே? நாளைக்குக் கல்யாணம் முடிஞ்சு அப்புறம் எல் லாம் இருக்கு; மாப்பிள்ளை மகா முரடராம்; அப்ப என்னடி செய்யப் போறே? என்று ஒரு குறும்புக்காரத் தோழி கேட்டாள் மெல்லிய குரலில்! தாமரைக்கு இருந்த தவிப்பில் தோழியின் கேலியைக் சுவைக்க முடியவில்லை; 'சுள் என்று எரிந்து விழுந்தாள், சும்மா 4 F கிடடி!" எனக் குதித்து! முதியோர்களான ஆடவர்க்கும் மூதாட்டிகளுக்குமிடையே ஒவ்வொரு வாலிபரும் தாமரையிடம் தானியம் வாங்க வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அந்த இடத்தை விட்டு விரை வில் நகராத காரணத்தால் தானியம் வழங்கும் நிகழ்ச்சி தாமத மாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. 'இந்த வாலிப வயதில் கூட இவர்கள் வறுமையில் வாடு கிறார்களே?" என்று மெதுவாக ஒரு தோழியிடம் தாமரை சொன்னாள். உழைக்க சோம்பேறித்தனப் பட்டால் இப்படித்தான் வாட ணும்!" என்று முணுமுணுத்துக் கொண்டாள் அந்தத் தோழி! - அப்போது, சாக்கடையில் தோய்த்து எடுத்தது போன்ற கந்தலாக அதுவும் கிழிந்த ஆடையொன்றை அணிந்து, பரட் டைத் தலையுடனும், தாடியுடனும் நடக்கக் கூடச் சக்தியில் லாமல் ஒருவன் தானியம் வாங்க நடந்து வந்தான். நடக்க முடியவில்லை என்பதால் அவன் கிழவனல்ல. நோயாளியாக வும் தெரியவில்லை. பல நாள் பட்டினி கிடந்தவனைப் போலத் தோற்றமளித்த அந்த வாலிபனைத் தாமரை நாச்சி யார் மெத்தப் பரிதாபத்துடன் நோக்கினாள். அவனும் அவளை உற்றுப் பார்த்தான். அப்போது, 'என்னம்மா தாமரை, இன்னும் முடியவில் லையா?" என்று கேட்டுக் கொண்டே அங்கு தாமரை நாச்சி யின் தாயார் பெருமாயி அம்மாள் வந்து சேர்ந்தாள். வந்த வளின் கண்ணில் அந்தப் பட்டினிப் பிச்சைக்காரன் பட்டான். 64 'என்னப்பா - உனக்கு என்ன வேணும்; அரிசியா? 6