உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி அறையின் பலகணியை விடுத்துத் தளபதி திருமலை இருக்கும் பகுதிக்கு வந்தான். திருமலையோ மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டான்! காரணம்: ஆரிச்சம்பட்டிப் படை வீரர்கள் - ஏதோ தற்கொலை செய்து கொண்டு களச்சாவை யாசித்துப் பெறுவதற்கு வந்த தைப் போல ராச்சாண்டார் மலைப்படையினரின் தாக்குதலில் சுருண்டு விழுந்து கிடந்தனர். கொத்தளப் பகுதியிலிருந்து கடைசியாக வந்த ஒரு வீரன் சொன்னான்; "சின்னமலைக்கொழுந்து அப்படியே அசைவற்றுக் குதிரை யில் அமர்ந்திருக்கிறார். அவருக்குத் துணையாகவும், படைக் குத் தலைமையேற்றும் வந்த வாலிபர்கள் மூவரும் கூட அவ் வாறே அவர்களின் குதிரைகளில் அமர்ந்திருக்கிறார்கள். நாம் விடும் அம்புகளை மட்டும் அவர்கள் தமது கேடயங்களால் மிக லாவகமாகத் தடுத்துக் கொண்டு சமாளித்தவாறு இருக் கிறார்கள்! மற்றபடி; ஆரிச்சம்பட்டிப் படை அறவே அழிந்து விட்டது!' அந்த வீரனைத் திருமலை தட்டிக் கொடுத்து பெரும் சிரிப் பொலி செய்தான்! தொடர்ந்து, திருமலை தனது படைவீரர் களுக்கு புதியதோர் ஆணை பிறப்பித்தான்! "போதும்! அம்பு பொழிவதை நிறுத்துங்கள்! சின்னமலைக் கொழுந்தைக் கொன்று விட வேண்டாம்! அவரும் அவரோடு வந்த ஓரிருவரும் பிழைத்துப் போகட்டும்! பெண்களின் திரு மணத்தைப் பெற்றவர் பார்க்க வேண்டாமா? வாழ்த்த வேண் டாமா?" தமது தளபதி ஆணைப்படி ராச்சாண்டார் மலைக்கோட்டை யிலிருந்து அம்பு பொழிவது நிறுத்தப்பட்டது. மாந்தியப்பன்; தளபதி திருமலையிடம் தனக்குள்ள ஒரு ஆசையை வெளியிட்டான். 44 'திருமலை! நமது கோட்டைக்கு வெளியே ஆரிச்சம்பட்டி யார் நிற்கிறார்! இப்போதே முத்தாயி பவளாயி இருவரையும் கோட்டை கொத்தளத்துக்கு அழைத்து வந்து; அவர் கண் ணுக்கு நேராகவே அந்தப் பெண்கள் இருவர் கழுத்திலும் நான் மாலையணிவித்து விடுகிறேன்! இப்படித்தான் ஆரிச்சம் பட்டியாரை மானபங்கப்படுத்த வேண்டும்! 143