உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி ஆரிச்சம்பட்டிக் குடும்பம் அடைபட்டிருந்த அறைக்குத் திரு மலை சென்றான். வெளிப்புறமாகக் கதவு திறக்கப்பட்டது. அறையின் உள் தாழ்ப்பாளைத் திறக்க முடியவில்லை. திறப்ப தற்கு உள்ளே இருந்தவர்களும் சம்மதிக்கவில்லை. புதிய ஆபத்து வருவதை உணர்ந்து நடுங்கினர். தாங்கள் காப்பாற்றப் படவில்லை என அறிந்து நினைவு தடுமாறினர். ஏற்கனவே உடைக்கப்பட்டிருந்த பலகணியின் வழியாகக் கையை உள்ளே விட்டுக் கதவின் உட்தாழ்ப்பாளைத் திறந்தனர் வீரர்கள்! திருமலை உள்ளே நுழைந்தான். அவர்களிடம் மரியாதை யுடன் செய்தியைச் சொன்னான். மாந்தியப்பன், தலைகால் தெரியாமல் ஆடிக் கொண்டிருந்தான். 'தலையூர் புறப்படுகிறோம்! ஆரிச்சம்பட்டிப் படை அழிந்து விட்டது உங்களை மீட்க வந்தவர்கள் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறார்கள்! அவர்களையும் கைது செய்யாதது அவர்கள் செய்த பாக்கியம்! மங்களகரமான மணவிழா தலையூரில் நடை பெறும்போது உங்கள் தந்தையும் வருகை தந்து வாழ்த்த வேண்டு மென்கிற பெரு விருப்பத்துடன் தலையூர் மன்னர் காளி இருக் கிறார். தயவுசெய்து புறப்படுங்கள்! தகராறு செய்யாதீர்கள்!' - திருமலையின் இந்தச் சொற்களைக் கேட்டு அவர்கள் சோகப் பதுமைகளாக நின்றார்களே தவிர தகராறு எதுவும் செய்யவில்லை! கோட்டை முகப்பில் நிறுத்தப்பட்டிருந்த ரத வண்டிக்குச் சிலம்பாயி, முத்தாயி, பவளாயி மூவரும் கொண்டு வரப் பட்டார்கள். அவர்களை ரத வண்டியில் உட்கார வைத்த பிறகு வையம்பெருமானையும் சங்கிலியால் பிணைத்தபடியே அந்த வண்டியில் ஏற்றினார்கள். இரு கம்பீரமான குதிரைகளில் தளபதி திருமலையும், மாந்தி யப்பனும் ஏறி அமர்ந்தனர். இந்தக் காட்சியைக் கோட்டைக்கு வெளியே தொலைவில் குதிரைகளில் இருந்தவாறு சின்னமலைக்கொழுந்தும் பொன் னர், சங்கர், வீரமலை ஆகியோரும் கண்கொட்டாமல் பார்த் துக் கொண்டிருந்தனர். ரதவண்டி, கோட்டை முகப்பிலிருந்து வேகமாகக் கிளம்பிற்று. 145