உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் யானின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் ஒன்று சங்கரன் மலை! தனக்கும் குன்றுடையானுக்கும் தனது தங்கை தாமரைநாச்சி யின் திருமணம் காரணமாக ஏற்பட்டிருந்த மனக்கசப்பு இன்ன மும் நீங்காத நிலையில்; குன்றுடையானுக்குச் சொந்தமான சங்கரன்மலைக்கு எப்படிச் செல்வது என்ற தயக்கம் சின்ன மலைக் கொழுந்துவுக்கு! அந்தப் பழைய நிகழ்ச்சியை அந்த வீர வாலிபர்களிடத்திலே இப்போது விளக்கிச் சொல்வதற்கு அவரே வெட்கப்பட்டார். செல்லாத்தாக் கவுண்டரும் அவரது மகன் மாந்தியப்பனும் மக்களிடத்திலே தொடர்ந்து பெற்று வருகிற வெறுப்பும் மனிதாபிமானமற்ற முறையில் வெளிப்படுகிற அவர்களது சேட்டைகளும் சின்னமலைக்கொழுந்துவின் உள்ளத்தில் அவர் களைப் பற்றிய ஒரு பயங்கரத் தோற்றத்தை உருவாக்கியிருந்த மையால்; எப்படியோ அன்றைக்குத் தனது சகோதரி தாமரை யின் மணவிழாவில் ஏற்பட்ட திடீர் மாற்றமும் அவளைப் பொருத்த வரையில் நலமாகவே முடிந்தது என அவர் சில நேரங்களில் எண்ணிக்கொள்வார்! இருந்தாலும் கூட; தனது தங்கை, பிறந்து வளர்ந்த குடும்பத்தை ஒரு நொடியில் அலட் சியப்படுத்திவிட்டு நெல்லியங்கோடனுடன் இல்லறம் நடத்தப் புறப்பட்டு விட்ட அந்த அதிர்ச்சி அவர் இதயத்திலிருந்து அறவே நீங்கியபாடில்லை! பொன்னரின் வார்த்தைக்கு மறுவார்த்தை கூற அவருக்கு மனம் வரவில்லை. திடீர் திடீரென வந்த ஆபத்துக்களில் இருந்து தனது குடும்பத்தையே காப்பாற்றிய அந்த தீரமிகு இளைஞர்களின் மீது அவர் கொண்டிருந்த மதிப்பினாலும், அன்பின் ஆழத்தினாலும் பொன்னரின் யோசனையை அப் படியே ஏற்றுக் கொண்டு பின் தொடர்ந்தார். ஆரிச்சம்பட்டி வீரர்களுடன்! நெருக்கமாக மரங்களடர்ந்த காட்டுப்பாதை -ராச்சாண்டார் மலையிலிருந்து வடக்கு திசை நோக்கிச் செல்லும் அந்த பாதையில் பொன்னர், சங்கர், வீரமலை மூவரும் குதிரை களில் முன்செல்ல அவர்களையொட்டி சின்னமலைகொழுந் தின் குதிரை செல்ல -பின்தொடர்ந்து ரத வண்டியும், வண்டி யைச் சுற்றி வீரர்களும் புடைசூழ்ந்து வர வேகமான பயணம் ஆரம்பமாயிற்று! 148