உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையின் ஊர்வலம் 19

"என் தங்கையின் சபதம் நிறைவேற வேண்டுமென்றால் அவள்பெற்ற குழந்தைகள் இப்போது உயிரோடு இருக்க வேண்டுமே!" மாயவரைப் பார்த்து மட்டுமல்ல; தாமரையையும் ஓர விழி களால் நோக்கியவாறு சின்னமலைக்கொழுந்து கேட்டார். அந்தக் கேள்விக்கு விளக்கமாகவே விடையளிக்கும் முனைப் போடு மாயவர், கனைத்துக் கொண்டு நிமிர்ந்தார். 'தாமரை பெற்ற குழந்தைகள் உயிரோடிருப்பதாகத்தான் நான் நம்புகிறேன். அப்படி அவர்கள் இருந்தால், நாமெல் லோரும் சேர்ந்து தாமரை நாச்சியின் சத்தியம் நிறைவேறுவதற் குத்தான் ஒத்துழைக்க வேண்டும்". மாயவரின் இந்தப் பீடிகையைக் கேட்டதும் சின்னமலைக் கொழுந்து சிறிது அதிர்ந்து போனார். அது எப்படி? அந்தக் குழந்தைகள் உயிரோடிருப்பதாக, நம்புவதாக, ஓர் அனுமானம் செய்து கொண்டு - அதற்காக நான் அளித்த வாக்குறுதியை நட்டாற்றில் விட்டு விடுவது நியாயம் ஆகுமா? இந்த இளம் வீரர்கள் எனது வாக்கு நாண யத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்?' சின்னமலைக்கொழுந்து, தனது வாக்குச் சுத்தத்திற்கு ஊறு வந்து விடக் கூடாது என்பதிலே எவ்வளவு அக்கறை காட்டு கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மாயவர்; 'அந்த வாலிபர்கள் என்ன கருதுகிறார்கள்? என்பதை இப் படி சுற்றி வளைத்து அறிந்து கொள்ளப் பார்க்கிறீர்கள்! உங்க 164