உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் இந்தச் செய்திகளை எல்லாம் ராக்கியண்ணனுக்குத் தெரி விக்க ஒரு இளைஞன் இருந்தான். அவன் பெயர் வீரமலை. ராக்கியண்ணன் பாசறையில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், ராக்கியண்ணனின் உத்திரவுப்படி அடிக்கடி சங்கரன் மலைக்கும் குடையூருக்கும் சென்று அந்தக் குழந்தை களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி வந்து ராக்கியண்ண னுக்குத் தந்து கொண்டிருந்தான். அந்தக் குழந்தைகள் விஷயத் தில் ராக்கியண்ணன் இவ்வளவு அக்கறையோடு இருப்பதற்கு என்ன காரணம் என்று அந்தச் சிறுவன் வீரமலை மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தான். அவன் அப்படிக் குழப்பத்திலிருக்கிறான் என்பது ராக்கியண் ணனுக்கும் தெரியும். அதற்காக அவர் எந்தவொரு விளக்கத்தை யும் வீரமலைக்குச் சொல்ல வேண்டுமென்று நினைக்கவில்லை. யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிக்க வேண்டுமென்று மனதால் நினைப்பது கூடப் பெரும் பாபம் எனக் கருதும் குன்றுடை யான் போன்ற அப்பாவிகளுக்கு வலுவில் சென்றாவது துணை நிற்க வேண்டுமென்பதுதான் ராக்கியண்ணனின் கொள்கை யாக இருந்தது. . குழந்தைகளுக்கு இன்று விலை உயர்ந்த பட்டுச் சொக்காய் தைத்துப் போட்டிருக்கிறார்கள்.' குழந்தைகளுக்கு இன்று தங்கத் தொட்டில்கள் இரண்டு செய்து தொங்க விடப்பட்டுள்ளன.' குழந்தைகளுக்கு இன்று முத்து மாலைகள் அணிவிக்கப்பட்டன. குழந்தைகளுக்கு இன்று வைரமிழைத்த தண்டைகள் பூட்டப் பட்டன. இப்படி அவ்வப்போது வீரமலை, ராக்கியண்ணனுக்குத் தகவல்கள் கொடுத்துக் கொண்டேயிருந்தான். மாயவர் இதைச்சொல்லும்பொழுது வீரமலையின் உள்ளம் நெகிழ்ந்தது. ஆனால் தன்னை அடையாளம் காட்டிக் கொள் ளக் கூடாது என்ற உறுதியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல்; யாரோ ஒரு இளைஞனைப் பற்றி மாயவர் சொல்வதைக் கேட்பது போல கேட்டுக் கொண்டிருந்தான். வீரமலையின் திடத்தை; உள்ளுக்குள் பாராட்டியவாறு பொன்னரும் சங்கரும் அவனைப் பார்த்தனர். அவன் உறுதியை வியந்தனர். 176