உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் அந்த எழுத்துக்கள் வீரமலையின் விழிகளில் மின்னல்கோடு களாகப் பாய்ந்து வெட்டின! அதைத் தொடர்ந்து அவன் இதயத்தில் சமாளிக்க முடியாத மற்றொரு கொந்தளிப்பு! அதுதான் தலையூர் வீரனிடம் ராக்கியண்ணன் சொன்ன பதில்! என்னிடம் ஒப்படைத்த வேலையை நானே செய்து முடிப்பதாக மன்னரிடம் நான் சொன்னதாகச் சொல்லிவிடு! என்று ஆசான் சொன்னதிலேயிருந்து, குன்றுடையாரின் குழந் தைகளை ஆசானே கடத்திக் கொண்டு போய்த் தலையூர்க் காளியிடம் ஒப்படைக்கப் போகிறார் என்றல்லவா ஆகிறது! வீரமலைக்கு ஒன்றுமே புரியவில்லை! தலையூர் மன்னரின் ஓலையை ஆசான் தன்னிடம் ஒப்படைத்து இந்தப் பயங்கர மான சதித்திட்டத்தைப் பற்றிய ரகசியத்தை எதற்காகத் தனக் குத் தெரிவிக்க வேண்டும்? ஒருவேளை, தனது உதவியோடு அந்தக் குழந்தைகளைக் கடத்த ஆசான் திட்டமிட்டுள்ளாரா? எந்தக் குழந்தைகளை மருத்துவச்சிகள் மூலம் நடைபெற்ற சதியிலிருந்து காப்பாற்றிக் கொடுத்தாரோ அதே குழந்தை களை அவரே கடத்தப் போகிறாரா? எந்த முடிவுக்கும் திட மாக வர முடியாமல் அந்த இளைஞன் பாசறையில் படுத்துப் புரண்டு கொண்டிருந்தான். பொங்கல் திருநாளையொட்டி பாசறை மாணவர்கள். அவர்களது ஊர்களுக்குச் சென்றிருந்த காரணத்தால் தனிமையில் இருந்த அவனுக்குத் தூக்கமே பிடிக்க வில்லை. பயிற்சி மாணவர்கள் யாரும் இருந்தால்தான் என்ன; அவர்களிடம் கலந்துரையாடி பகிர்ந்து கொள்ளக் கூடிய விஷ யமா இது? ஆசான் மனம் நல்ல மனம். அதனால் எது நடந்தாலும் நல்லதாகத் தான் நடக்கும்.' என்று திடப்படுத்திக் கொண்டு, அதிகாலையில் எழுந்து ராக்கியண்ணன் ஏறிச் செல்வதற்கான குதிரையைத் தயார்படுத்தி நிறுத்தினான். பயணத்துக்குத் தேவையான பொருள்கள் அடங்கிய பை ஒன்றும் குதிரைக் கருகிலேயே வைக்கப்பட்டது. 41 புறப்படுவதற்குத் தயாராக வந்த ராக்கியண்ணன், வீரமலை யைப் பார்த்து, 'நீயும் ஒரு குதிரையில் என்னுடன் வருகிறாய்!" என்றார். சிறிது தயங்கிய வீரமலை தனக்கும் ஒரு குதிரையைத் தயார் செய்து கொண்டு ஏறி உட்கார்ந்தான். இருவரும் புறப் பட்டனர். போகும் வழியிலேயே ராக்கியண்ணன், சங்கரன் மலைக்கோட்டையில் வீரமலை செய்து முடிக்கவேண்டிய சாக சம் என்ன என்பதை அறிவித்து விட்டார்! தான் மேற்கொண் 188