உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் சபதம். 24 - - 'ஆசானின் விருப்பத்தையும் அறிந்து அவர் ஒப்புதலையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் எனக்கு கருத்து வேறு பாடே இல்லை. ஆசானிடம் இவ்வளவு மரியாதையும் நன்றி உணர்வும் கொண்டிருக்கிற பொன்னர் சங்கர் இருவரின் நல்ல பண்பை நான் பாராட்டுகிறேன். உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் கொடுப்பது - துணை நின்றவர்களுக்குத் துரோ கம் விளைவிப்பது வளர்த்து ஆளாக்கியவர்களின் முதுகி லேயே குத்துவது என்பதே இன்றைக்குப் பலரது குணாதிசயங் கள் ஆகிவிட்டிருக்கும்போது அவர்களுக்கு மத்தியில் உப்பிட்ட வரை உள்ளளவும் நினைக்கின்ற உண்மையான நெஞ்சங் களும் இருக்கின்றன என்பது மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது! பொன்னர் - சங்கரின் இந்தப் புனித எண்ணத்தை நாம் அனைவரும் மதித்தே ஆக வேண்டும்" என்று உணர்ச்சி மேலிட மாயவர் கூறினார். அப்படியானால் இப்போதே இங்கிருந்து குன்றுடையார் மாரிக்கவுண்டன்பாளையத்துக்கு ஒரு ஓலையனுப்பி, ராக்கி யண்ணனை உடனே புறப்பட்டு வருமாறு செய்யலாமே! என்று சின்னமலைக்கொழுந்து யோசனை தெரிவித்தார். .. . பொன்னரும் சங்கரும் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ள வில்லை. 'ஆசானால் வளர்க்கப்பட்ட நாங்களிருவரும் இங்கே இருந்துகொண்டு. எங்களைப் பார்க்க அவரை அழைப்பது எந்த வகையில் நியாயமாகும்? எங்களுக்கு தாயாக தந்தை யாக -ஆசானாக விளங்கிடும் அந்தத் தியாகத் திருவிளக்கு இருக்குமிடம் நோக்கி நாங்கள் சென்று, நடந்தவைகளைச் சொல்லி, அவர் காலைப் பிடித்துக் கொண்டு ஆனந்தக் கண் ணீர் வடிக்கும் வரையில் எங்கள் பரபரப்பும் பதற்றமும் நிற் காது. எனவே எங்களுக்கு விடை கொடுங்கள்" என்று அவர் கள் கேட்டனர். 208