உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் 'உனக்காக ராக்கியண்ணனிடம் நான் பேசிக் கொள்கி றேன். சங்கரமலைக்கோட்டையில் நீ இருக்க வேண்டியது மிக அவசியமாகும்!" என்று மாயவர் கூறிக் கொண்டே புறப்படத் தயாரானார். வீரமலையிடம் விடை பெற்றுக் கொள்ளும் சாக் கில் அவன் பக்கம் திரும்புவது போலத் திரும்பிக் கண்களை விட்டுத் தேடிப் பிடிக்கச் சொன்னார்கள் பொன்னரும் சங்க ரும்: முத்தாயி பவளாயியை! அவர்கள் முகம் முழுமையாகத் தெரியாவிட்டாலும் அந்தத் திங்கள் முகங்கள் மறைந்திருந்த திரைச்சீலை மட்டும் மெல்ல அசைந்து அவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள் என்ற ரகசி யத்தைச் சொல்லிற்று. எங்களைத் தவிக்க விட்டுப் போகிறீர் களா? என்று அந்த விழிகள் கேட்டன. பிரிய முடியாமல் பிரி கிறோம் என்று ஏக்கத்துடன் விடையளித்தவாறு அங்கிருந்து மெல்ல விலகின பொன்னர் - சங்கரின் விழிகள்! தாயும் தந்தையும் தழுவி முத்தமீந்து விடைகொடுத்து வாழ்த்தியனுப்பி னர். சின்னமலைக்கொழுந்து சிலம்பாயி வையம்பெருமான் மூவரும் புன்னகை மலர நின்றனர். அருக்காணித் தங்கம் திரைமறைவில் நின்றவள் ஓடோடி வந்து, பொன்னர்-சங்கர் இருவரின் கைகளையும் பிடித்துக் கொண்டு, அண்ணா! அண்ணா! சீக்கிரம் வந்து விடுங்கள்!" என்று பாசத்தைப் பொழிந்தாள். மாயவர், பொன்னர், சங்கர், மூவரையும் ஏற்றிக் கொண்ட குதிரைகள் சங்கர் மலைக்கோட்டையிலிருந்து புறப்பட்டன. மாரிக்கவுண்டன்பாளையம் பாசறையில் சோலைப் பக்க மாக உலவிக் கொண்டிருந்த ராக்கியண்ணன் குதிரைகளின் குளம்படிச் சப்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். அவர் பார்த்தவுடனேயே பொன்னரும் சங்கரும் தங்கள் குதிரைகளில் இருந்து கீழே குதித்து ஆசானுக்குத் தமது பணிவை உணர்த் தும் வகையில் குதிரைகளைப் பிடித்தவாறு நடந்து வந்தனர். மாயவர் மட்டும் ராக்கியண்ணன் உலவிக் கொண்டிருந்த இடம் வரையில் குதிரையில் வந்து மெல்ல இறங்கினார். ராக்கியண்ணன் பேசுவதற்கு இடம் வைக்காமலே மாயவர் முந்திக் கொண்டார். பொன்னர் - சங்கர் புரிந்த வீரச் செயல் களை மாயவர் சொல்லக்கேட்டு ராக்கியண்ணன் மகிழ்ச்சியில் திளைத்தார். 210 தங்களை யாருடைய மக்கள் என்று தெரிவிக்காதது மட்டு