உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி இதழோரம் புன்னகையை நெளியவிட்டுக் கொண்டு மாய வர், அவர்களை நோக்கி மெல்ல நடந்து வந்தார். 'உங்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறேன்; எங்கு போய் விட்டீர்கள்?" எனச் சற்றே ஆறுதல் பெற்றவனாக தலையூர்க் காளி ஆவலுடன் கேட்டான். 'உன்னிடம் சொல்லிவிட்டுத்தானே புறப்பட்டேன். அண்டை அருகாமையில் உள்ள ஆட்சியாளர்கள் எப்படியிருக்கிறார்கள்; அவர்களிடமெல்லாம் நமது தலையூர் அரசின் அணுகுமுறைகள் எவ்வாறு அமைதல் வேண்டும்; என்ற விபரங்களை ஆங்காங்கு சென்று அறிந்து வரத்தான் சென்றிருந்தேன். எனது பழைய நண்பர். ஆசான் ராக்கியண்ணனைச் சந்தித்தேன். குன்றுடை யான் குடும்பத்தினரைப் பார்த்தேன், பேசினேன். அந்தச் சமயம் நான் எதிர்பாராதவிதமாக இப்போது நீயும் செல் லாத்தாக் கவுண்டரும் எந்த இளைஞர்களைப்பற்றி விவா தித்துக் கொண்டிருக்கிறீர்களோ; அந்த இளைஞர்களும் அங்கு வந்து விட்டார்கள்!" இதைக் கூறிக் கொண்டு மாயவர், காளி மன்னனின் தோளில் தட்டிக் கொடுத்தார். அப்படித் தட்டியது பொறுமையாக இரு பொங்கியெழுந்து விடாதே -என்று அவனை அமைதிப் படுத்துவது போல இருந்தது. அந்த இளைஞர்கள்தான் யார் என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்.ராச்சாண்டார்மலையில் நமது தளபதி திருமலை யையே வீழ்த்துகிற அளவுக்கு ஆற்றல் பெற்ற வீரர்கள் யாராக இருக்க முடியும்?" காளி மன்னன் மாயவரிடம் உடனே பதிலை எதிர்பார்த் தான். மாயவர் அவன் எதிர்பார்த்தவாறு பதில் கூறியிருப் பாரோ என்னவோ; அதற்குள் செல்லாத்தாக் கவுண்டர் குறுக் கிட்டு விட்டார். "தலையூர்த் தளபதி மட்டும் கொல்லப்படவில்லை. ராச் சாண்டார்மலையை இழந்து விட்டதால் தலையூரின் மானமும் கொல்லப்பட்டு விட்டது! அதற்குத் துணை நின்ற அந்தத் துடுக்கு மிக்கப் பொடியன்களை யாரென்று கண்டுபிடித்தேயாக வேண்டும். 219