உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி களைக் கொன்றவர், கொல்வதற்குக் காரணமாக இருந்தவர் பழிவாங்கப்பட வேண்டும். அந்தப் பணியை இந்தப் பொன் னர் சங்கர்தான் நிறைவேற்ற வேண்டும். அதுவரையில் இவர்கள் பிரம்மச்சாரிகளாகவே இருக்க வேண்டும்.என் மனைவியின் பிணத்தின் முன் நின்று இவ்வாறு சபதம் செய்த வன் நான்! என் சபதத்தை நிறைவேற்றுவதாகவும் அது வரை யில் பிரம்மச்சாரியாக இருப்பதாகவும் பொன்னர் சங்கர் என்னிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்கள். அதற்கு மாயவரும் சாட்சி!" என்று ஆசான் சொன்னவுடன் பொன்ன ரும் - சங்கரும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு, அவரது முழங்காலைப் பற்றிக் கொண்டு, அய்யனே! இதற்கு சாட்சி எதற்காக? நாங்கள் செய்த சத்தியத்தை இல்லையென்று மறுக் கவா போகிறோம்?" என்று பதற்றமுடன் கேட்டனர். .. 'பிரம்மச்சாரியாக வாழ்வது! இந்தச் சொற்றொடர் அங்கிருந்தோர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது எனினும், முத்தாயி பவளாயி இரு வரையும் திகைப்புத் தீயிலேயே தூக்கி எறிந்து கருக்கத் தொடங் கியது. நொடிக்கு ஒரு திருப்பமாக இன்பமும் துன்பமும் அவர் களின் இதயத்தில் மாறி மாறி வலம் வருவது ஏன் என்று கலங்கித் துடித்தனர். தங்களை மணக்கவே பிறந்தவர்கள், தங்களின் அன்பு நெஞ்சத்தை அள்ளிக் கொண்டவர்கள் பிரம் மச்சாரிகளாக வாழ்வது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாமல் திணறினர். ஆசானின் சபதம் எப்போது நிறைவேறப் போகிறது? அதை நிறைவேற்றும் பணியில் என்ன விளைவுகள் ஏற்படுமோ? இந்தக் கேள்விகளும் முத்தாயி பவ ளாயி இருவரையும் திக்குமுக்காடச் செய்தன. அம்மனுக்கு எடுத்த கரக விழாவிலேயே சூறைக்காற்றில் ஆற்றுடன் போயி ருக்கக் கூடாதா - அல்லது அந்த முதலைக்கோ மலைப்பாம் புக்கோ இரையாகியிருக்கக்கூடாதா என்று வேதனைக் கண் ணீர் வடித்தனர். ஆசானின் காலில் விழுந்து, அந்தக் கால் களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "எங்களுக்காக இரக்கம் காட்டுங்கள்" என்று கெஞ்ச வேண்டும் போல் இருந் தது. ஆனால் பேச நா எழாமல் உடலும் அசைவற்றுப் போனது போல அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டனர். சின்னமலைக்கொழுந்தின் முகத்தை சிலம்பாயி தாங்க முடி யாத வருத்தமுடன் பார்த்தாள். தன் மனைவியின் மனம் படும் பாட்டை சின்னமலைக்கொழுந்து புரிந்து கொண்டார். ஆகை யால் ஆசானிடம் பேசிப் பார்த்தால் பயன் கிடைக்குமென்ற 231