உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி சபதத்தை நிறைவேற்றுவதற்காகப் பிரம்மச்சாரிகளாக இருக்க முடியாது. அது தேவையுமில்லை என்று பொன்னரும் சங்கரும் கூறிவிட மாட்டார்களா என முத்தாயியும் பவளாயியும் ஒருக் கணம் துடித்தார்கள் என்றாலும்; அய்யோ! அப்படிக் கூறிவிட்டால் அவர்கள் வாக்குறுதி தவறிய வாய்மையற்றவர்கள் என்ற பழிக்கு ஆளாகி விடு வார்களே; வேண்டாம் வேண்டாம் அவர்கள் தங்களுக்குக் கிடைக்காவிட்டாலும் உலகத்தின்முன் உறுதியற்ற உள்ளம் படைத்தவர்கள் என்ற அவப்பெயர் அவர்களை அணுக வேண் டாம்!' என்று தங்கள் நெஞ்சத்து உதடுகளால் பிரார்த்தனை செய்து கொண்டார்கள். 4. ஆசான். தங்களது தோளைப் பிடித்துக் கொண்டு நீங்களே பதில் சொல்லுங்களப்பா" என்றுரைத்தவுடன் பொன்னர் சங்கர் இருவரும் சின்ன மலைக்கொழுந்திடம் வந்தனர். 'எங்களுக்காக உங்கள் பெண்கள் காத்திருக்கத் தேவை யில்லை. அவர்களுக்கு வேறு நல்ல இடமாகப் பார்த்து மணம் முடியுங்கள். ஆசானிடம் நாங்கள் செய்து கொடுத்துள்ள சத்தியத்தைக் காப்பாற்றுவதே எங்கள் வாழ்வின் முக்கியமான லட்சியம்!' இந்த பதிலை அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் முத்தாயி யும் பவளாயியும் ஆவேசம் வந்தவர்கள் போல அலறிவிட்ட னர். அந்தக் கூடத்தில் அவ்வளவு பேர் நிற்கிறார்களே என்ற நாணமோ அச்சமோ அவர்களைத் தடுத்திடவில்லை. ஓடோடி வந்து சின்னமலைக்கொழுந்து சிலம்பாயி இருவரின் கால் களையும் பிடித்துக் கொண்டு கதறியழுதனர். அப்பா! அம்மா! நாங்கள் வாழ்வதாகயிருந்தால் அவர் களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறோம். இல்லா விட்டால் சாவது ஒன்றே நல்ல வழி எங்களுக்கு! நீங்களும் எங்கள் அத்தையும் நினைத்தபடியே திருமணம் நடக்கட்டும். அவர்கள் ஆசானின் சபதத்தை நிறைவேற்றும் வரையில் உடலுறவு இல்லாமலே இல்வாழ்க்கை நடத்துகிறோம். இப் போதே எங்கள் திருமணத்தை நடத்தி விடுங்கள். அத்தான் இருவரும் ஆசானின் சபதம் முடிக்கும்வரையில் பிரம்மச்சாரி களாக இருக்கட்டும். மணவிழா என்பது இவர்களோடுதான் எங்களுக்கு; இல்லையேல் - எங்கள் பிணங்களைத்தான் பார்க்க முடியும்! 233