உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பொன்னர்-சங்கர் என்று சங்கரின் உற்சாகத்திற்கு அணைபோட்டுத் தடுத்தான் பொன்னர். அதற்குள் மாயவர் தலைமையில் சோழநாட்டுப் படை அங்கு வந்து சேர்ந்தது. பொன்னர் மாயவருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்றான் என்றாலும் சங்கரைப்போல் அளவு கடந்த மகிழ்ச்சியுடையவனாக அவன் காணப்படவில்லை. "தம்பி சங்கர் விபரமனைத்தும் சொன்னான். மிகவும் நன்றி. ஆனால் ஒரு சந்தேகம். அதனை நீக்காவிடில் சோழப்படையின் உதவியைப் பெறுவதில் நாங்கள் தயக்கம் காட்ட வேண்டி யிருக்கும். வீரவடிவத்தில் சங்கரையும், விவேகத்தின் உருவமாகப் பொன்னரையும் கண்டுகளித்த மாயவர், தனது வழக்கமான புன்னகையை நெளியவிட்டுக் கொண்டே, "என்ன பொன்னர் உனக்குச் சந்தேகம்? அதுவும் இந்த நேரத்தில்? ஆரிச்சம் பட்டியை மீட்டதோடு நிற்காமல் வளநாட்டையும் கைப்பற்ற வந்த நீங்கள் தலையூர்க்காளியின் வலிமைவாய்ந்த படைகளைச் சந்திக்க வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் வலியவரும் சோழப்படையின் உதவியைப் புறக்கணிக்கிற அளவுக்கு அப் படியென்ன சந்தேகம்?" என்று வினவினார். அருகே ஆரிச்சம்பட்டிப்படையும் வளநாட்டுப்படையும் மோதுகிற ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கிறது. பிணமாகும் வீரர்கள் எழுப்புகிற கடைசிக் குரல் காற்றில் கலந்து கொண் டிருக்கிறது. வாட்களோடு வாட்கள் ஈட்டிகளோடு ஈட்டிகள் உராயும் சப்தம் காதுகளைச் செவிடுபடச் செய்து கொண்டிருக் கின்றன. இறுதிவெற்றி வளநாட்டுக்குத்தான் கிட்டும் என்பதற் கான அறிகுறிகள். ஆரிச்சம்பட்டிப்படையினால் வளநாட்டுப் படையின் எதிர்ப்பைத் தாக்குப்பிடிப்பது எளிதல்ல என்ற நிலைமை. அந்தச் சூழலிலும் பொன்னர் அமைதியிழக்காமல் நிதானமாகப் பேசினான். "சோழப்படையின் உதவியைப் பெற்று நாங்கள் வளநாட்டை செல்லாத்தாக் கவுண்டரின் ஆதிக்கத்திலிருந்து மீட்டுவிடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். அதற்குப்பிறகு, நாங்கள் சோழ மன்னனின் ஆதிக்கத்தில் அவருக்குக் கப்பம் கட்டுகிறவர்களாக வும் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாகவும் வள நாட்டில் ஆட்சி செலுத்த வேண்டியிருக்குமென்றால்; அந்த நிபந்தனையுடன் கூடிய படை படை உதவி எங்களுக்குத் தேவை 250