உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மகிழ்ச்சியும் - மருட்சியும் 'எங்கே அந்த மசச்சாமி? மலைக்கொழுந்தாக் கவுண்டரின் இடி முழக்கம் போன்ற அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் பெருமாயி அம்மாளும் தாமரைநாச்சியும் வாயடைத்துப் போய் நின்றனர். தோ இருக்கிறேன் மாமா!" என்றவாறு; அங்கு தொங் கிக் கொண்டிருந்த பட்டுத் திரையின் பின்னாலிருந்து நெல்லி யங்கோடன் வெளியே வந்தான். அவன் முகத்தில் அச்சம் இல்லை. அத்தையும், அன்புக்குரிய தாமரையாளும் அருகே யிருக்கிறார்கள் என்ற அசட்டுத் துணிச்சல் போலும்! 44 உன்னைக் கொட்டடியில் போட்டது மட்டும் போதாது! கொலையே செய்திருக்க வேண்டும். வீட்டில் நல்ல காரியம் நடக்கிறதே என்பதற்காக இந்த அளவோடு விட்டது என் தவறாகப் போயிற்று!" எனச் சீறிப் பாய்ந்து அவன் தலை முடியைப் பிடித்து உலுக்கினார். விடுங்கள் அவனை!" என்று அவரது கையைப் பிடித்து இழுத்துத் தள்ளினாள் பெருமாயி அம்மாள்."அப்பா! முத லில் என்னைக்கொன்று விட்டு பிறகு அவரைக் கொல்லுங் கள்!' என்று கத்திக் கொண்டே குறுக்கே வந்து நின்றாள் தாமரையாள்! இந்த வீட்டில் பெண்கள் ராஜ்யம் நடத்துகிறீர்களா? உங் கள் இருவரின் செய்கையால் நாளைக்கு இந்த ஊர் மட்டு மல்ல; பக்கத்து நாடுகள் எல்லாம் கூட என்னைக் காறித் துப்பும் என்று கோபாவேசமாகக் குதித்தார் மலைக்கொழுந் தாக் கவுண்டர் 17