உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் இதயத்தையும் துயரம் அழுத்திக் கொண்டிருந்த போதிலும், தவையான கடமை களைச் செய்யாமல் தானும் சோர்ந்து கிடக்கக் கூடாது என்ற தெம்பு அவளைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தது. மருத் துவர்கள் ஆசான் பிழைத்துக் கொள்ளக்கூடும். அதற்கான அறிகுறிகள் இருக்கின்றன என்று எவ்வளவோ நம்பிக்கை தெரிவித்துக் கூறியும் கூட பொன்னர் சங்கர் இருவரும், ஆசான் கிடத்தப்பட்டிருந்த கட்டில் அருகே சிலைகளைப் போல் நின்றவர்கள் நின்றவர்கள்தான் ! அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை. அவர்களது மனக்கண் முன்னே கடந்த கால நிகழ்ச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஆசானின் தோளி லும் மடியிலும் தவழ்ந்து விளையாடியது அவர் அருகில் உட்கார்ந்து உண்டது - அவர் பக்கத்தில் படுத்து உறங்கியது அவர் கல்வி புகட்டியது - களம்புகு வீரர்களாக அவர்களை ஆக்குவதற்குப் பயிற்சி அளித்தது - அன்பு காட்டியது அர வணைத்து மகிழ்ந்தது - அறிவுரை கூறியது - இவையனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிழலாடியதால் நெஞ்சுத் துடிப்பு இரட்டிப்பான நிலைமையில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர். - குன்றுடையானும் தாமரை நாச்சியாரும் ஒவ்வொரு மருத்து வராக ஓடியோடி சந்தித்து; எப்படியிருக்கிறது? எப்படியிருக் கிறது? என்று கேட்பதிலே பரபரப்பு காட்டினர். மருத்துவர் கள் என்ன பதில் சொல்லியிருப்பார்கள்? நல்ல பதிலா? அல்லவா? என்பதை குன்றுடையான், தாமரை இருவரின் முக பாவங்கள் மூலமாக அறிந்து கொள்ள மற்றவர்கள் துடித் தனர். ஆசான் அடிபட்டு வீழ்ந்து உணர்விழந்து ஒரு முழு நாளும் முடிந்து அடுத்த நாளும் வந்து விட்டது; இன்னமும் அவர் கண்ணிமைகள் அசையக் கூட இல்லை. சுவாசம் மட் டுமே ஓடிக் கொண்டிருந்தது. மறுநாள் நள்ளிரவு! அதுவரையில் அந்தக் கோட்டைக்குள் யாரும் உண்ணவுமில்லை, உறங்கவுமில்லை! மருத்துவர்கள் தீவிர சிகிச்சையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகாமல் ஆசானின் உடலில் ஒரு அசைவு தெரிந்தது. மெல்லிய முனகல் சப்தமும் எழுந் தது. தங்களின் முயற்சிக்கு வெற்றி கிட்டுகிறது என்ற மகிழ்ச்சி யுடன் மேலும் விரைந்து சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற் கொண்டனர். சிறிது நேரத்திற்குப் பிறகு பெரிய மருத்துவர்; பொன்னர் - சங்கர் இருவரையும் அருகழைத்து குரல் கொடுத் துப் பார்க்கச் சொன்னார். 266