உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - இருப்பான்! ஆரிச்சம்பட்டியில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, அவனைப் பெரிய வெற்றி வீரனாக நினைக்கத் தூண்டியிருக் கும். அவனும் ஏற இறங்கப் பார்த்து அலட்சியம் காட்டுவான். இதையெல்லாம் விட என் மனத்தை அலைக்கழிக்கும் ஒன்று; பொன்னர் சங்கர் என்ற அந்தப் பொல்லாச் சிறுவர்கள் அங்கேயிருப்பார்கள் என்பதுதான்! ராச்சாண்டார் மலையில் தலையூரின் துணைத் தளபதி திருமலையை வீழ்த்தி வெற்றி கண்டவர்கள் அவர்கள்! ஆரிச்சம்பட்டியைக் கைப்பற்றிய மாந் தியப்பனை விரட்டியவர்கள் அவர்கள்! மாயவர் கொண்டு வந்த சோழப்படையின் உதவியுடன் வள நாட்டு ஆட்சியையே என்னிடமிருந்து அபகரித்து விட்டவர்கள் அவர்கள்! சங்கர மலையில் ராக்கியண்ணனை வீழ்த்திய தலையூர்ப்படை பராக் கிரமன் தலைமையில் அங்கே வெற்றி முரசு கொட்டப் போகும் வேளையில் அதனைத் தடுத்து நிறுத்தியவர்கள் அவர்கள்! எல் லாவற்றுக்கும் மேலாக அந்தப் பொன்னர் - சங்கர்தான் தலை யூர் மன்னனுக்கு எமன்கள் என்று செம்பகுலன் மேல் ஆவே சம் வந்து காளிதேவியே கூறியிருக்கிறாள் என்பதையும் மறந்து விடக் கூடாது! நமது பகைக் கும்பலுக்குப் பக்கத்திலே இ போது இருப்பது யார்? அந்தத் துரோகி மாயவர்! அதையும் அலட்சியப்படுத்தி விடக் கூடாது! இந்தச் சூழலில் மாரிக் கவுண்டன் பாளையத்துக்குப் பயணம் தேவையா?' என்று செல்லாத்தாக் கவுண்டர் எடுத்துரைத்தது காளி மன்னனைத் தடுத்து நிறுத்துவதற்காக என்பது போலத் தோன்றினாலும் தலையூரான் மனத்தில் அந்தப் பகையுணர்ச்சி மங்கிப் போய் விடக் கூடாது என்பதுதான் அவரது பிரதான நோக்கமாக இருந்தது. .. ஆசான் சாவுக்கு வரவில்லை என்ற அவப் பெயர் தனக்கு வந்து விடக் கூடாது என்பதற்காகத் தலையூர் மன்னன் மாரிக் கவுண்டன்பாளையத்துக்குப் புறப்படுவதில் எந்தத் தடையும் குறுக்கே நிற்க முடியவில்லை. மது மயக்கத்தில் உடல்வலியைச் சிறிது மறந்திருந்த மாந்தியப்பனையும் தன்னுடன் வருமாறு காளி மன்னன் அழைத்தபோது, மாந்தியப்பன் நடுங்கித்தான் போய்விட்டான். 46 'இத்தனை பகைவர்கள் மத்தியில் எப்படிப் போவது அப்பா?' என்று செல்லாத்தாக் கவுண்டரைக் கெஞ்சும் தோரணையில் பார்த்தான். பகைவர்களைப் பற்றிய ஒரு பயங் கரமான குறிப்பைச் செல்லாத்தாக் கவுண்டர் தலையூர் மன்ன னிடம் தந்தது; ஏற்கனவே கனன்று கொண்டிருக்கும் வெறுப்பை வளர்ப்பதற்காகத்தானே தவிர; அவருக்கே தெரியும் அவரது 276