உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் கருமேகம் சூழ்ந்து கொள்ளாதபோது நிலவு அழகாகவும் இருக்கிறது. தெளிவாகவும் இருக்கிறது. ஒளி மழையும் பொழி கிறது. அதுபோலத்தான் செல்லாத்தாக் கவுண்டர், மாந்தியப் பன் ஆகியோரின் துர்ப்போதனைகள் கிளம்பாத போது தலை யூர்க் காளி, குணத்தில் தங்கம் போலப் பிரகாசிப்பான்! அவர் களின் துர்ப்போதனை கோள் மூட்டல் இவை கருமேக மென மறைத்துக் கொள்ளும்போது அவன் தன்னையே இழந்து விடுவான்! 2017 - ஒருக்கணம் அந்தத் தீமை அவனைத் தீண்டாத நிலையில் ஆசானின் மீதுள்ள அன்பையும் மரியாதையையும் மெத்த பண் புடன் உணர்த்திய காளி மன்னன், எங்கே அமரலாம் என்று சுற்றுமுற்றும் விழியோட்டிய போது -குன்றுடையான், தனது அடக்கமான இயல்புக்கேற்ப விரைந்து வந்து தனது இருக்கையில் அவனை அமர்த்திவிட்டு, அவன் வேறொரு இருக்கைக்குச் சென்று விட்டான். குன்றுடையானைப் பின்பற்றி சின்ன மலைக் கொழுந்தும் எழுந்து விடவே தலையூரானுக்குப் பக் கத்து இருக்கையில் மாந்தியப்பன் உட்கார்ந்து கொண்டான். ராய் - - - அவர்களிருவரும் இருந்த இருக்கைகளுக்கு நேராக ஏதோ தற்செயலாக குன்றுடையான் குடும்பத்துப் பெண்களும், ஆரிச்சம்பட்டிக் குடும்பத்துப் பெண்களும் இருந்தனர். ஒரு பெரும் சாவுக்கு வந்திருப்போர் அனைவருமே அந்த மனித ரின் சிறந்த வாழ்க்கை பற்றியும், ஈடு இணையற்ற வீரங் குறித் தும். தலை தாழாத தன்மான உணர்வு குறித்தும் எண்ணியவ ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசியவராய் - சோகக் கடலில் சங்கமித்திருந்தனர். அதனால் மகளிர் கூட்டத்தின் பக்கம் அவர்கள் கண்கள் திரும்பினாலும் அங் குள்ள எல்லாப் பொருள்களையும் பார்ப்பது போலத்தான் அவை பார்த்துத் திரும்பின. ஆனால் மாந்தியப்பனின் குரங்கு மனமும், அந்த மனத்தால் இயக்கப்படுகிற விழிகளும் மகளிர் பக்கம் மொய்த்தது மொய்த்ததுதான்! அங்கிருந்து விடுபடவே யில்லை. சோகச் சூழலை வெளிப்படுத்த சங்கு ஒன்று அந்தப் பாச றையில் முழங்கிக் கொண்டிருந்தது. ஆசான் அன்புடன் வளர்த் ததும், அவர் வழக்கமாக ஏறிச் செல்வதுமான குதிரை அவருக் கருகே நின்று கொண்டிருந்தது. துக்கம் கேட்கவும். மறைந்து விட்ட பெரும் வீரரின் முகம் காணவும் அலை மோதிக் கொண்டிருந்த கூட்டம், தலையூரான் வருகையினால் மூக்கின் மீது விரல் வைத்து வியப்பு தெரிவித்தது. ஆசான் உடலுக்கு 278