உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- பொன்னர்-சங்கர் தலையூர்க்காளி மன்னன், மாந்தியப்பனையும் பராக்கிர மனையும் ஓரக்கண்ணால் பார்த்து, "போகலாம்" என்பது போல ஜாடை காட்டவே அவர்கள் எழுந்தனர். ஆசான் ராக்கியண்ணனை அடக்கம் செய்வதற்கான ஏற் பாடுகள் விரைவுபடுத்தப்பட்டன. அந்தப் பரபரப்பில் தலை யூர்க்காளி மன்னன் அங்கிருந்து புறப்பட்டு விட்டது குறித்து யாரும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. - ஆனால் ஒன்று. வெளிப்படையாகவே தலையூர்க்காளி மன்னனுக்கும் பொன்னர் - சங்கருக்கும் ஒரு பெரிய மோதல் ஒருவரையொருவர் வீழ்த்திட முனையும் மோதல் உருவா கப் போகிறது என்பதற்கு ஆசானின் மரண சாசனம் முகவுரை எழுதியிருப்பதாகவே அனைவரும் தீர்மானித்துக் கொண்டனர். தலையூர்க்காளியின் ரத வண்டி மாரிக்கவுண்டன் பாளை யத்தை விட்டு வெகு தொலைவு வந்து விட்டது. ரத வண்டிக் குப் பின்னால் ஒரு சில வீரர்கள் குதிரைகளில் பாதுகாப்பாக வந்து கொண்டிருந்தனர். ரத வண்டியை பராக்கிரமனே ஓட்டி வந்தான்.பின்னால் உள்ள இருக்கைகளில் காளி மன்னனும், மாந்தியப்பனும் அமர்ந்திருந்தனர். நீண்ட நேரம் மெளனம் ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த ரத வண்டியில் ஒரு களைப்புக்கிடையே மாந்தியப்பனின் குரல் மௌனத்தைக் கலைத்து சிலிர்த்துக் கொண்டு கிளம்பியது. காளி மன்னன் கவலைப்பட்டு இப்போதுதான் நான் பார்க்கிறேன். கதிரவனே திசை மாறினாலும் காளி மன்ன னின் வெற்றியை எவனும் தட்டிப் பறிக்க முடியாது என்று பெயர் பெற்றதெல்லாம் கற்பனைதானா?' மாந்தியப்பனின் இந்தப் பேச்சு தலையூரானைத் தலை நிமி ரச் செய்தது! - மாந்தீ! நான் அஞ்சி நடுங்கவில்லை. என்னையும் உன் தந்தையையும் தீர்த்துக் கட்டுவதற்காகவே அந்த ஆசான் ராக்கி யண்ணன்; பொன்னர் சங்கரை வளர்த்து விட்டு இப் போது மரண சாசனமும் எழுதி வைத்துள்ளாரே; அதை நினைத்துப் பார்க்கிறேன்! அந்தத் திட்டத்தை எப்படி முறி யடிப்பது என்று சிந்திக்கிறேன்! அவ்வளவுதான்!" 286