உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடையுடைத்த தடந்தோள் 33 தலையூர் அரண்மனை வாசலில் ரத வண்டி வந்து நின்ற தும்; அதுவரையில் மாந்தியப்பனின் திட்டம் குறித்து சிந்தித்துக் கொண்டே மௌனமாக இருந்த காளி மன்னன், மாந்தியப் பன் தோளைக் குலுக்கி, 'மாந்தி! உன் யோசனை ஏற்கப் படுகிறது. பராக்கிரமா! இந்தக் காரியத்திலாவது நீ வெற்றி பெறுவாயல்லவா?" என்று வினயமாகக் கேட்டுக் கொண்டே கீழே இறங்கினான். தனது திட்டத்தைத் தலையூர் மன்னன் ஏற் றுக் கொண்டதால் மாந்தியப்பனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி, பராக் கிரமனும் மன்னன் முன் தலைதாழ்த்தி, "எப்படியும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவேன்" என்று உறுதி கூறி நின்றான். .. அரண்மனைக் காவலர்கள், துணைத் தளகர்த்தர்கள், மற்றும் பிரதானியர் பணிந்து வரவேற்க, சிந்தனை தேக்கிய முகத் துடனே காளி மன்னன், தனது ஆலோசனை மண்டபத்துக் குள் நுழைந்து வெள்ளியாலான ஆசனமொன்றில் அமர்ந் தான். 'பயணம் எப்படியிருந்தது?" எனக் கேட்டுக் கொண்டே செல்லாத்தாக் கவுண்டர் அவனருகில் வந்து உட்கார்ந்தார். மன்னன் வருகைக்காகக் காத்திருந்தவன் போல அரண்மனைக் காவலன் ஒருவன், அவன் முன்னால் முதுகு வளையக் குனிந்து வணங்கி விட்டு முத்திரையிடப்பட்ட ஓலையொன்றை மெத்த மரியாதையுடன் நீட்டினான். என்ன இது? யார் அனுப்பி யது? என்று வினவியவாறு காளி மன்னன் ஓலையைக் கையில் வாங்கி, அதனைப் பிரித்துப் படிக்குமாறு செல்லாத்தாக் கவுண்டரிடம் கொடுத்தான். ஓலையைப் பிரித்துப் பார்த்த செல்லாத்தாக் கவுண்டரின் விழிகள் அகன்று விரிந்தன. "உறையூர் மன்னர் * அக்களதேவச் சோழரிடமிருந்து வந் துள்ள ஓலை" என்றார் செல்லாத்தாக் கவுண்டர்! இந்த விப ரத்தைச் சொல்லும்போதே அவர் முகம் வெறுப்பால் கறுத்துப் போயிருந்தது. அக்களதேவச் சோழ மன்னனின் பெயரைக் கேட்டவுடன் தலையூர்க்காளிக்கும் கண்கள் சிவந்தன. மீசை 289