உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் யாமல் தத்தளித்த வீரமலை, அவளது கரங்களின் பிடியிலிருந்து கால்களை விடுவித்துக் கொண்டு நகர்ந்து சென்றான். 'இளவரசியைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என் னைத் தொடாதீர்கள். எவ்வளவோ உயரத்தில் இருக்கும் ராஜ குலம் எங்கே சோழன் தோட்டியின் மகன் இந்த வீரமலை எங்கே?" - 'குலம், கோத்திரம்,உயர்வு, தாழ்வு இவைகளையெல்லாம் கணக்கெடுத்துக் கொண்டு காதல் மலர்வதில்லை. அப்படி மலர்ந்தால் அதற்குக் காதல் என்று பெயருமில்லை. இப்போது இந்த அறையில் நின்று கொண்டிருப்பவர்கள் சோழ நாட்டு இளவரசியும் வள நாட்டு தளபதியும் அல்ல! உங்கள் மீது உயிரையே வைத்து விட்ட உதயநந்தினியும் அவளது உயி ரைக் காப்பாற்றுகிற பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய அவளது காதலன் வீரமலையும்தான்!' - என்னைப்பற்றிச் சொல்லி விடுகிறேன். குன்றுடையார் குடும்பத்துக்கு மிகவும் கடமைப்பட்டது என் குடும்பம். என் தந்தையார் காலத்துக்கு முன்பிருந்தே கோளாத்தாக் கவுண்டர் குடும்பத்துக்கு விசுவாசமாக இருந்த குடும்பம். இன்றைக்கும் எனது உயிரான கடமை இந்தக் குடும்பத்திற்கு எல்லா வகை யிலும் விசுவாசமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதுதான்! இளவரசியின் எண்ணத்தை நிறைவேற்றுகிற எந்தவொரு முடி வையும் நானே எடுக்க முடியாது! எனக்குத் தாயாகவும் தந்தை யாகவும் இருக்கிற தாமரைநாச்சியாரும் குன்றுடையாரும் எனது சகோதரர்களாக விளங்குகிற பொன்னர் சங்கருந்தான் என் னைப் பற்றி எந்த முடிவையும் எடுக்க உரிமை படைத்தவர் கள்! 11 அப்படியானால் அவர்கள் சம்மதம் கொடுத்தால் உங்களுக்கு மறுப்பு ஏதும் இல்லையே?" 46 'மின்னல் வெளிச்சத்தில் படிக்கச் சொல்வது போல இருக் கிறது இந்தத் திடீர் கேள்விக்கு என்னிடம் பதிலை எதிர் பார்ப்பது!' "மின்னலாவே தெரிகிறது! எதிரே இருப்பது நிலவாகத் தெரியவில்லையா?" 334