உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் அறைக்குள் சென்ற இளவரசி, படியில் கால் வைக்கும் போதே மீண்டும் ஒரு முறை, ஆ என்று கூச்சலிட்டுக் கொண்டே கீழே விழுந்து விட்டாள். அறைக்குள் லிழுந்த வளை, அறைக்கு வெளியே நின்ற வீரமலை ஒரே பாய்ச்சலில் பாய்ந்து தூக்கி நிறுத்தினான். "பயந்து விட்டீர்களா?" என்று கேட்டுக் கொண்டே அவள் கலகலவென்று சிரித்து அவனைக் கட்டித் தழுவிக் கொண் டாள். 14 ஊஹூம்! என்ன இளவரசி இது? வேண்டாம்; விட்டு விடுங்கள்!' இன்னும் என்ன இளவரசி என்ற மரியாதை? நான் இப் போது தளபதி வீரமலையின் காதலி!" 41 'அந்த அறையில் பேசி முடிவு செய்ததை இந்த அறையில் மாற்றி விடலாமா? கூடாது! கூடவே கூடாது! வளநாட்டுக் குடும்பத்து சம்மதமும் - உறையூர்க் குடும்பத்து சம்மதமும் இல் லாமல் நாம் தவறு செய்து விட்டால்; இரு நாடுகளுக்குமே இருவருமே துரோகம் செய்தவர்களாகிவிடுவோம். வீரமலையின் நெஞ்சம், பருவ காலத்துக்கடலின் அலைகள் உயர்ந்தும் தாழ்ந்தும் ஒன்றோடொன்று மோதிச்சிதைவது போல; ஒருநேரம் அவள்மீது மயங்கியும் அடுத்த நேரம் தயங்கியும் குழம்பிக் கலங்கிக்கொண்டிருந்தது. 'கொஞ்ச நேரம் உட்காருங்களேன். பேசிக் கொண்டிருக் கலாம்!* "இல்லை இளவரசி: எனக்கு பயமாயிருக்கிறது! வருகிறேன்!" வீரமலை. அவளை ஆசை தீர ஒரு முறை பார்த்துவிட்டு வெளியே செல்ல அறைக்கதவின் பக்கம் வந்தான். d அய்யோ... சொன்னால் கேளுங்கள்! நான் ஒன்றும் உங் களைக் கடித்துத் தின்று விட மாட்டேன்" என்றுரைத்த இள வரசி, அவனை இறுக அணைத்துத் தழுவிக் கொண்டே, அறைக் கதவைத் தாழிட்டு விட்டாள். 338