உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் யின் உள்ளத்திலும் இப்படிச் சில நேரங்களில் கருணையும் இரக்கமும் சுரப்பதுண்டு. தனது மன்னனின் மடியில் தன் தலையிருப்பதை ஒரு பாக்கியமாகக் கருதிக் கொண்ட பராக் கிரமன் : தான் செய்த தவறுக்கு மன்னன் கொடுத்த தண்டனை மிக அதிகம் என்பதைத் தனது கண்ணீர் அருவியின் வாயிலாக வெளிப்படித்தினான். 64 'அரசே! என்றான். நா அசைய மறுத்தது. அரசன்,பராக் கிரமனின் விழிநீரைத் தனது கரங் கொண்டு துடைத்து விட் டான். மெத்த சிரமத்துடன் பராக்கிரமன் மீண்டும் பேச முயற் சித்தான்... 14 'அரசே! அந்தக் கிளியிருக்கும் இடத்தைப் பற்றிய ரகசியம் அருக்காணியிடமிருந்து கிடைத்தால் அதை நானே தேடியெடுத் துத் தங்களிடம் கொண்டு வந்து "- அத்துடன் பேச்சு நின் றது! மூச்சும் அடங்கியது! அதிகப்படியான தண்டனை தான் கொடுத்து விட்டோமோ என்ற சஞ்சலத்துடன் தனது தளபதி யின் முகத்தையே காளி மன்னன் உற்றுப்பார்த்துக் கொண் டிருந்தான். ம் வடிவழகியைக் கைது செய்து அவளைச் சூழ்ந்து நின்ற வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் பராக்கிரமனின் உடலை சூழ்ந்து வந்து நின்று, தங்களின் தளபதிக்கு வீர வணக்கம் செலுத்தினர். அந்த வீரர் கூட்டத்திலிருந்த துணைத் தளபதிகளில் ஒருவனிடம் தலையூர் மன்னன்; பராக்கிரமனின் உடலை சகல மரியாதைகளுடன் வீரப்பூர் காட்டிலேயே அடக் கம் செய்து விடுமாறு ஆணையிட்டான். பின்னர் தாழ்வாரத் திற்கு வந்து வடிவழகியை இழுத்துச் சென்று அவளது வீட்டி லேயே விட்டுவிடுமாறு பணித்தான். அப்போது வடிவழகி கதறியழுது கொண்டே ஓடிவந்து, காளிமன்னனின் களைப் பிடித்துக் கொண்டு, "பிரபு! எனக்கு ஒன்றுமே தெரி யாது! எல்லாம் தளபதியாரின் சொற்படிதான் நடந்தேன். என்னை மன்னித்து விடுங்கள்' என்று கெஞ்சினாள். கால் உன்னை மன்னித்திருப்பதால்தான் உன் வீட்டில் கொண்டு போய் விடச் சொல்கிறேன்" என்று அவளிடம் கூறிய காளி மன்னன்; உள்ளே அறைப்பக்கம் திரும்பிப் பார்த்து, "அந்தப் பெண் எங்கே?" என்று கேட்டான். உடனே வீரர்கள் ஆளுக் கொரு பக்கம் அந்த அறைக்குள்ளும் மண்டபத்திற்குள்ளும் ஓடிப்போய் குப்பாயியைத் தேடினார்கள். அந்த மண்டபத்தில் ஏற்பட்ட பரபரப்பைப் பயன்படுத்திக் கொண்டு குப்பாயி. 368