உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி ஒரு வீரன் தனது கழுத்தை வளைத்தும் நிமிர்த்தியும் விட்டுக் கொண்டு மற்றவர்களைப் பார்த்து. என்னப்பா ஒரு மாதிரி மயக்கமாக இருக்கிறது; உங்களுக்கு எப்படியிருக்கிறது?" என்று கேட்டான். அங்கிருந்த தலையூர் வீரர்கள் அனைவரும் இதே கேள்வியை ஒருவரைப் பார்த்து ஒருவர் கேட்டுக் கொண் டனர். பிறகு அவர்களால் பேச முடியவில்லை. எல்லோருமே மயக்கமுற்றனர். எழுந்திட முயன்றனர் முடியவில்லை. ஆளுக்கொரு மரத்து நிழலை நாடி நகர்ந்தனர். அதற்குள் உணர்விழந்து ஆங்காங்கு வீழ்ந்து விட்டனர். - அந்தப் பாறையின் நீரோடை ஒரு விஷ ஊற்று என்பதை குப்பாயியும் அறியவில்லை தலையூர் வீரர்களும் அறிய வில்லை - பளிங்கு போல் தெளிந்த நீரோடையாகக் காட்சி யளிக்கும் அது; பயங்கரமான நச்சு கலந்தது என்பதை ஒரு சிலரே அறிவர். அந்த நீரை அருந்துவோர் ஒரு நாள் இரு நாள்கூட எழ முடியாத அளவுக்கு மயக்கமுற்று கிடப்பார்கள் பலவீனமான உடலமைப்பு கொண்டவர்கள் அந்த விஷ நீரின் சக்தியைத் தாங்கமாட்டாமல் உயிரையும் விட்டிருக்கிறார் கள். அந்த பாறையைச் சுற்றிலும், குகைக்குள்ளும் வளர்ந் துள்ள விஷ மூலிகைகள் அந்தத் தண்ணீரில் கலந்து கரைந்து நீரோடையையே நச்சுப் பொய்கையாக மாற்றி விட்டிருந்தன. - - - கண் கவரும் இயற்கைக் காட்சியும் காலை மாலை வெயி லின் ஒளியில் அந்தப் பாறையின் பளபளப்பான மஞ்சள் வண்ணமும் - அடர்ந்த மரஞ்செடிகளுக்கிடையே வெள்ளி உருக்கினாற் போன்ற நீரோடையும் ஆகா; என்ன கவர்ச்சி! என்ன கவர்ச்சி! என்று எவரையும் அருகே இழுக்கும் தன்மை யும் கொண்டவைகள்தான் எனினும் ஏமாந்தால் மயங்கி விழநேரிடும்; மயங்கி வீழ்ந்தோரில் சிலர் மாய்ந்திடவும் நேரி டும் அதனால் தான் அதற்கு "ஆள் மயக்கிப் பாறை" என்று; வீரப்பூர் காட்டில் ராக்கியண்ணனின் மூதாதையர் பாசறை நடத்திக் கொண்டிருந்த போது, பெயர் எழுதி வைத்து அதனருகே யாரும் செல்லக் கூடாது என்று எச்சரிக்கைப் பலகையும் நட்டு வைத்திருந்தனர். - கால ஓட்டத்தில் தலையூர் ஆதிக்கத்தில் அந்தக் காடு வந்து விட்டதால் நல்லது எது? கெட்டது எது? என ஆய்ந்து பார்க்க வும் - ஆய்ந்து சொல்லவும் தகுதி படைத்த நிர்வாக அமைப்பு கள் எதுவுமின்றிப் போனதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அந்த ஆள் மயக்கிப் பாறை பற்றிய எச்சரிக்கைக் குறிப்புகள் அனைத் தும் அழிந்து போய் விட்டன. 373