உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விற்பனையாம பொழுது விடிந்து சிறிது நேரத்திற்கெல்லாம் மயங்கிவிழுந்த குப்பாயியும் - தலையூர் வீரர்களும் மறுநாள் மாலைப்பொழுது வரும் வரையில் மயக்கம் தெளிந்து எழுந்திடவில்லை. ஆள் மயக்கிப் பாறையின் நச்சுத் தண்ணீர், அந்த அளவுக்கு அவர் களை உணர்விழக்கச் செய்திருந்தது. மாலை நேரத்துக் கதிரவ னின் ஒளிக்கதிர்கள் மரக்கிளைகளினூடேயும் அடர்ந்த தழை களினூடேயும் எட்டிப் பார்த்து, இரண்டு பகல்கள் குப்பாயி யெனும் அந்த இளந்தளிரைக் கடுமையாக சுட்டெரித்து விட்ட தற்கு மன்னிப்புக் கோருவது போலக் காட்சியளித்தன. முட்டைக்குள்ளிருந்து வெளிவரும் குஞ்சுகளைப் போல அவளது விழிகள் இமைகளைத் திறந்து கொண்டு வெளி யுலகைப் பார்க்கத் தொடங்கின. பதினாறு ஆண்டுகளுக்கு மேலாகப் பார்த்த உலகுதான் என்றாலும் - கொடிய மயக்கத் திலிருந்து மீண்ட காரணத்தினால் அவளுக்குத் தன்னைப் பற்றியே நம்பிக்கையில்லை! தான் யார்? என்று தனக்குத் தானே பலமுறை கேட்டுக்கொண்டபிறகே குப்பாயி என்ற முடிவுக்கு அவளால் வர முடிந்தது. தனக்கு உயிர் இருக்கிறதா என்பதையும் அவள் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக ஒரு முறைக்கு இரு முறை தன்னுடலைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். எல்லாம் சரியாக இருக்கிறது. உயி ரோடுதானிருக்கிறோம், என்ற நம்பிக்கையும் வந்தாகி விட்டது. எதற்காக இந்த இடத்தில் படுத்துக் கிடக்கிறோம் - இல்லை! இல்லை! விழுந்து கிடக்கிறோம்? அதையும் சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தபிறகே அவளால் தெரிந்துகொள்ள முடிந்தது. வழக்கமாகப் படுத்துறங்கும் இடத்தை விட்டு வேறு இடத் தில் படுத்துறங்கி, பாதித் தூக்கத்தில் கண் விழித்தாலே இருக்குமிடத்தை நன்றாக நினைவுபடுத்திப்பார்த்துத்தான் புரிந்து 375