உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி 'விஷத்தண்ணீர் என்று ஏன் சொல்லுகிறாய்? நாமும் எத் தனையோ மது வகைகளைக் குடித்திருக்கிறோம். எதிலும் இல்லாத போதை இதில் அல்லவா கிடைத்திருக்கிறது. அத னால் இதை உலகத்திலேயே சிறந்த மது என்று ஏன் சொல் லக் கூடாது?' ஆமாம்! ஆமாம்! குடங்கள் மட்டும் இருந்தால் ஆளுக்கொரு குடம் இதை மொண்டுகொண்டு தலையூருக்கே போகலாம் 'அதைவிட எனக்கு ஒரு யோசனை உதிக்கிறது! இந்த நீரோ டையை இப்படியே வாய்க்கால் வெட்டி நீட்டிக்கொண்டு போய் - நமது தலையூர்ப் படை முகாம் வரையில் தண்ணீர் பாய்ச்சினால், தினந்தோறும் இதிலேயே நாம் நீச்சல் அடிக் கலாம்!" 4 6 ஏனப்பா பேசமாட்டீர்கள்? மயக்கம் தெளிந்து உயிரோடு எழுந்துவிட்டோம் அல்லவா; அதனால் பேசுகிறீர்கள்! நல்ல வேளை இன்னும் இரண்டு வாய் தண்ணீர் அதிகம் குடித் திருந்தால் இந்நேரம் எல்லோரும் மேல் உலகத்தில் இருந்திருப் போம். அதை மறந்து விடாதீர்கள்! ஏய் தெரியுமா சேதி! நான் இந்தத் தண்ணீரைக் குடித்த தும் ஒருமாதிரியான போதை! சொர்க்கலோகத்திலே இருக்கிற மாதிரி! ஒரு பெண்ணுடைய கன்னத்தைக் கடித்து அப்படியே தின்ன வேண்டும் போலிருந்தது!' 14 'நல்ல வேளை! நாம் தேடியலைந்த பெண் அகப்பட்டிருந் தால் அவள் கன்னத்தைக் கடித்திருப்பாய்! உம்! அவள்தான் கிடைக்கவில்லையே! அதனால் என்ன செய்தேன் தெரியுமா? அதோ அந்த மாமரத்தில் ஏறினேன். ஒரு மாங்காயைப் பறித்துக் கடித்தேன். அதற்குள்ளே மயக்கம் தலை சுற்றியது. அப்படியே கீழே விழுந்தேன். அப்புறம் இப் போது தான் கண் விழிக்கிறேன்.' .. தலையூர் வீரர்களின் உரையாடலைக் கேட்டு, குப்பாயி மீண்டும் மீண்டும் தனது கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண் டாள். பாறையின் அருகே ஒரு மாமரம் இருப்பதையும் அதில் மாங்காய்கள் கொத்துக் கொத்தாய்த் தொங்குவதையும் கண் டாள். ஆனாலும் அவள் சமாதானமடையவில்லை. அந்தச் சண்டாளன் பெண்ணின் கன்னமென எண்ணி, மாங்காயைக் P 377