உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் டில் நின்று கொண்டிருப்பது கூட நமது பெருமைக்கு இழுக்கு! தலையூர் சிற்றரசுக்கு ஒரு கடுகளவு எதிர்ப்பு காட்டப்பட்டா லும் அந்த எதிரியை சம்பந்தியாக ஏற்றுக் கொள்வதற்கு எனது இருதயம் இடம் தராது! மணியங்குரிச்சியாரின் பெண் என்ன; பெரிய ரம்பை ஊர்வசியாகவே இருந்தாலும் -இனி அவளே வந்து என் காலில் விழுந்தாலும் நான் அவளை என் மனைவியாக வரிக்க மாட்டேன். ஆனால் ஒன்று; இன்று ஏற் பட்ட இந்த அவமானத்துக்கு மணியங்குரிச்சி வெகு விரைவில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இதன் பயனை வெகு விரைவில் பயங்கரமாக அனுபவிக்க வேண்டியிருக்கும்.' இப்படி படபடத்துக் கொண்டே, "வாருங்கள் அப்பா; வள நாடு திரும்பலாம்! என்று கர்ச்சனை செய்தான். "விதியென ஒன்றிருக்கும் பொழுது அதை மாற்றி எழுதிட முடியுமா?' என்று, விருந்து மண்டபத்தின் மேற்கூரையை அண்ணாந்து பார்த்தவாறு முணுமுணுத்து தலையூர்க்காளி செல்லாத்தாக் கவுண்டரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப் படுவதற்கு முன் சற்று கேலியான தோரணையில் மனத்தில் உள்ள புழுக்கத்தின் சாயலை சிறிதளவு வெளிப்படுத்தும் வகையில் மணியங்குரிச்சியாரை நோக்கி, "இவ்வளவு நேரம் உங்களூரில் நான் தங்கியிருந்ததை பொறுத்துக் கொண்டதற்கு நன்றி" என்றான். மாந்தியப்பனைத் தழுவியவாறு, "நீ எடுத்துள்ள முடிவு, தவிர்க்க முடியாத முடிவு. வரவேற்கிறேன். வேறு வழியில்லை. உறவினர்களுடன் உடனே திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்க. காலையில் சுப காரியம் நடக்கப் போகிற வீடு. அத னால் அசம்பாவிதம் எதுவுமின்றி அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். இது வளநாட்டுடன் நட்பு கொண்டுள்ள மேனாட் டுக் கோரிக்கை. என்ன சரிதானா?' என்று கூறிவிட்டு அங் கிருந்து வெளியேறினான்; காளி! செல்லாத்தாக் கவுண்டருடன் விருந்தினர் மாளிகையில் தங் கியிருந்தோர் அனைவருமே பயணத்திற்குத் தயாராயினர். அந் தக் கும்பலிலும், அது; பயணத்துக்குத் தயாரான சலசலப்பி லும் அவர்கள் ஒருவரோடொருவர் மணியங்குரிச்சியாரைப் பற்றி கேலியாகவும், கிண்டலாகவும், எதிர்ப்புக் குரலிலும், ஏகடியத்தொனியிலும் பேசிக் கொண்டது எதுவும் அங்கே அசைவற்று நின்று கொண்டிருந்த மலைக்கொழுந்தாக் கவுண் டரின் காதுகளில் தெளிவாக விழவில்லை. விடிவதற்குள்ளாக 30