உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி டிருந்தன. வீதிகளில் மக்கள் நடமாட்டமும் அதிகமில்லை. திரும்ப ஊருக்கு வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியெதுவும் குப்பாயியின் உள்ளத்தில் அரும்பியதாகக் கூறமுடியாதபடி அவள் தலை குனிந்தவாறே காணப்பட்டாள். சங்கர், குதிரையை கோட்டை முகப்பின் பக்கமாகத் திருப்பி னான். அப்போது குப்பாயி, அவனைப் பார்த்து, 'அண்ணா! முதலில் வீட்டுக்குப் போய் அப்பாவைப் பார்த்துவிட்டுப் பிறகு அரண்மனைக்குச் செல்லலாம் என்று கேட்டுக் கொண் டாள். "என்னம்மா திடீரென்று அப்பா ஆசை வந்துவிட்டது! அருக்காணியைத்தான் முதலில் பார்ப்பாய்! அவளும் ஓடிவந்து கட்டித் தழுவிக் கொள்வாள்! இரண்டு தோழிகளும் ஒருவர் கண்ணீரால் ஒருவரைக் குளிப்பாட்டுவீர்கள்; என்றல்லவா நினைத்தேன். நீ அதையெல்லாம் விடுத்து முதலில் அப்பா வைப் பார்க்க வீட்டுக்குப் போக வேண்டுமென்கிறாயே; எனக்கே ஆச்சரியமாக இருக்கிறதே! எனக் கேலி பேசினான் சங்கர்! 44 "இல்லையண்ணா! அப்பாவுக்கு உடல் நலமில்லையென்று தான் உங்களுக்குத் தெரியுமே! நான் கடத்தப்பட்ட செய்தி வேறு, அவருக்குத் தெரிந்திருக்கும்! அதை நினைத்து உடலை மிகவும் கெடுத்துக் கொண்டிருப்பார்! என்னைப் பார்த்து விட்டால் அவருக்கு நிம்மதியாக இருக்கும்! "என்னம்மா...உன் அப்பா படுத்த படுக்கையாகவா இருக் கிறார்- அப்படியொன்றுமில்லையே! இரண்டு நாளைக்கு முன்புகூட அரண்மனைக்கு வந்திருந்தாரே... என்று மேலும் சொல்ல வந்தவன், தனது தவறை உணர்ந்து கொண்டு அத் துடன் பேச்சை நிறுத்திக் கொண்டு மௌனமானான். 'அப்பா அரண்மனைக்கு வந்திருந்தாரா? எதற்காக அண்ணா?' + சங்கர் அவளிடம் உண்மையைச் சொல்வதென்றால்-குன் றுடையான். தாமரை நாச்சியார் இருவரின் மரணத்தைப் பற்றி யும் அதற்காகத்தான் அவளது தந்தை பச்சனா முதலியார் அரண்மனைக்குத் துக்கம் விசாரிக்க வந்திருந்தார் என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆனால் அவன் சமாளித்துக் கொண்டு, 'அதுதான்! நீ கடத்தப்பட்ட செய்தியறிந்து அதுகுறித்து விசா ரிக்கத்தான் வந்திருந்தார். நான் அவருக்குத் தைரியம் கூறி 16 381 .