உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி சேர மண்டலத்தில் வந்து தோன்றபேற்கு கங்கைகுலப் பெருங்குடியார் குலதெய்வமான கம்பீர மதுக்கரைச் செல்லி சகோதரியான காளியம்மன் தவமிகுந்த குலத்தவர்கள் வேளாளர் வாழ்த்த பாலையெனும் பொன்காளியம்மன் ஆடீரூஞ்சல்" வந் இஃதன்னியில் சோழநாட்டுத் திருப்பாதூரிலிருந்து தோர் என மற்றொரு குறிப்பும் மானாமதுரைப் பகுதியிலி ருந்து வந்தோர் என இன்னொரு குறிப்பும் - கர்நாடக மாநி லக் கோலார் பகுதியிலிருந்து குடிபெயர்ந்தோர் எனப் பிறி தொரு குறிப்பும் நெல்லைச் சீமையிலிருந்து வந்தோர் என வேறொரு குறிப்பும் - ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஓலைச்சுவடி கள், பழம்பாடல்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன. - இன்று திருச்சி, சேலம், கோவை, பெரியார். தர்மபுரி, போன்ற பல்வேறு மாவட்டங்களில் பரவியுள்ள வேளாண்குடி மக்களெனப்படும் கொங்கு வேளாளர் சமுதாயம்: தமிழ் நாட் டுக்குள்ளேயே ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் குடியேறி யுள்ளனர் என்பதையும், அன்றைய தமிழ்நாடு இன்றுள்ள எல் லையைக் காட்டிலும் பெரும் பரப்புடையதாக அமைந்திருந்தது என்பதையும் சிந்தித்திடும்பொழுது தமிழ்க்குல மாந்தர்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என்பதும் - பாய் கட்டிய படகு காற்று வீசுவதற்கேற்பக் கடலில் செலுத்தப்படுவதைப் போல. அக்காலத்தில் எழுந்த சூழ்நிலைகளுக்கேற்ப வாழுமிடங்களை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது என்பதும் புல னாகிறது. பரந்துபட்ட நெடிய நிலப்பரப்பில் தமிழ் வேந்தர்களான முடியுடை மூவேந்தர்களாம் சேர சோழ பாண்டியர் ஆட்சி விரிவடைந்திருந்த காலம் மாறி அவர்கள் ஆங்காங்கு குறுநில மன்னர்களாக சோழர், பாண்டியர், சேரர் எனும் தமது குலப் பெயரைப் பூண்டு குறுகிய நிலப்பரப்புகளைத் தமது ஆதிக் கத்தில் வைத்திருந்த கால கட்டத்தில்தான் இந்த வரலாற்றுக் குரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. சோழன் என்ற பெயரில் அரசர்கள் சிலர்; அவ்வாறே பாண்டியன், சேரன் என்ற பெயர்களில் அரசர்கள் சிலர்; சிதறுண்ட பெருநாடு களின் துண்டு துணுக்குப் பகுதிகளை ஆட்சி புரிந்து வந்தனர். அந்தக் காலமும் மெல்ல மெல்லத் தேய்ந்து, ஆங்கிலேயர் போர்த்துகீசியர், டச்சுக்காரர் போன்றோர் வாணிபச் சந்தை யாக நமது நிலத்தை வளைத்துப் போடத் தொடங்கிய காலம் தோன்றிற்று. XI

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்னர்_சங்கர்.pdf/4&oldid=1707044" இலிருந்து மீள்விக்கப்பட்டது