உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி டர் அவனது கரங்களைப் பற்றிக் கொண்டு, "பயப்படத் தேவை யில்லை! நானும் என்னுடைய தவறுகளை எண்ணிப் பார்க் கிறேன். என்னுடைய அறிவுரைகள்தான் இவ்வளவு விபரீதங் களுக்கும் காரணம்! இப்போது இந்தப் போரை எப்படியும் தடுத்தாக வேண்டும் அதற்கு ஒரே ஒரு வழிதான் எனக்குத் தெரிகிறது!" என்றார் மிகவும் பரிவுடன்! - 'என்ன வழி?' என்று தலையூர்க்காளி பரபரப்புடன் கேட் டான். செல்லாத்தாக் கவுண்டர் தனது கட்டை விரலையும் ஆட் காட்டி விரலையும் கொண்டு நெற்றியை அழுத்தித் தடவிக் கொண்டு, அவனைப் பார்த்துச் சொன்னார். 4 $ - 'மாயவரை நாம் இழந்தது மாபெருங்குற்றம்! அவரது அரிய மூளைத் திறனால்தான் வளநாடு வாழ்கிறது - தலையூர் தாழ்ந்து விட்டது! அந்தப் பேருண்மையை நானும் உணர்கிறேன். பொன்னர் சங்கரின் எதிர்ப்பைத் தவிர்க்கவும் தலையூர் நாட்டை தழைக்கச் செய்யவும் மாயவர் ஒருவர் மனம் வைத் தால்தான் முடியும்! தலையூரைப் பொன்னர் - சங்கர் தாக்கா மல் தடுக்கவும் - தலையூர் மன்னன் தலை தப்பச் செய்யவும் மாயவர் ஒருவரால்தான் இயலும்! செல்லாத்தாக் கவுண்டரின் இந்த வார்த்தைகளை எதிர் பார்க்காத தலையூர்க்காளி வியப்புற்று அவரையே கூர்மை யாலப் பார்த்தவாறு, 'மாயவரா? அவரை யார் அணுகுவது? எப்படி அணுகுவது?' எனக் கேட்டான். செல்லாத்தாக் கவுண் டர் சிறு கனைப்புக் கனைத்தவராக அங்குள்ள கட்டிலில் அமர்ந்தார். ஒற்றன் உட்பட அனைவரும் அவர் என்ன சொல் லப் போகிறார் என்பதையே ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். தலையூரிலிருந்து ஒரு தூதனை வளநாட்டுக்கு அனுப்ப வேண்டும். இருநாடுகளுக்கிடையே வளர்ந்து வரும் பகையைத் தவிர்த்துக் கொள்ள தலையூர் விரும்புகிறது என அந்தத் தூதன் தெரிவித்து, மேற்கொண்டு சமாதான உடன்படிக்கை பற்றிப் பேசி விவாதித்து சமரச முடிவு காண மாயவருக்கு தலையூர் வருமாறு அழைப்பு அனுப்ப வேண்டும். F கவுண்டர் இதைச் சொன்னதும் தலையூர்க்காளி அவரை நோக்கி, 'மாயவரை நாம் அழைத்தால் வருவாரா? சமரசத் துக்கு உடன்படுவாரா?' என வினவினான். 393