உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் - செல்லாத்தாக் கவுண்டருக்குப் பரிவு காட்டுகிற கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டதாகும் என்பதைத் தாங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள். என்னிடம் பெரும் படையுண்டு என்பதை நான் சொல்லித் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஆரிச் சம்பட்டிப் போரைத் தொடர்ந்தோ சங்கரமலைக் கோட் டைப் போரைத் தொடர்ந்தோ வீரப்பூர் காட்டில் எமது வீரர்கள் சங்கரால் விரட்டியடிக்கப்பட்டதையும் வீழ்த்தப்பட்ட தையும் தொடர்ந்தோ - அல்லது நான் துணை நின்றே தீர வேண்டிய செல்லாத்தாக்கவுண்டரின் மணிமுடி வளநாட்டில் பறிக்கப்பட்டதைத் தொடர்ந்தோ - தலையூர்ப் பெரும்படையை; சாவா? வாழ்வா? என்ற கேள்விக்குப் பதில் காணும் வகை யில் பயன்படுத்தியிருக்க முடியும்! அப்படியொரு ஆத்திரம் என் நெஞ்சில் அனலாகக் கிளம்பியபோது நீங்கள்தான் என் எதிரே அரூபமாக வந்து நின்று, "அவசரப்படாதே காளி மன்னா என்று அமைதிப்படுத்தியது போல் தெரிந்தது. இருநாட்டுப் படைகளும் முழுமையாக மோதிக் கொள்கிற இறுதிப் போர் நிகழுமேயானால் மிகப் பெரும் இழப்பு இருதரப்பிலும் ஏற் படும். இருநாட்டு மக்கள் மட்டுமின்றி இடையேயுள்ள பல நாட்டு மக்களும் அவதிக்கு ஆளாவார்கள். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் தங்களிடம் தனித்துப் பேசி நல்ல முடிவு ஒன்றை எடுக்கலாமென்ற தீர்மானத்துக்கு வந்துள்ளேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்; இந்த என் முடிவுக்கு செல் லாத்தாக்கவுண்டர் அவர்களும் ஆர்வத்துடன் உடன் பட்டிருக் கிறார். தங்களையும் தங்களது தீர்க்கதரிசனமிக்க அறிவாற்ற லையும் நான் இழந்தது மட்டுமல்ல; தங்களை ஈன்றெடுத்த தலையூர் நாடு இழப்பதற்கும் நானே காரணமாக இருந்து விட்டேன். CON திருந்துவது பின்னர் பிறிதொரு தவறு செய்வது; இது தானே தலையூர்க்காளியின் இயல்பு என எள்ளி நகையாடி என் கோரிக்கையையே அலட்சியப்படுத்தி விடாதீர்கள். அதே சமயம் இந்தக் கடிதம் போர் முனையில் சந்திக்கப் பயப்படுகிற ஒரு கோழையின் கூக்குரல் என்றும் எண்ணி விடாதீர்கள்! என்னையுணர்ந்த தாங்கள் அப்படி எண்ண மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். வீண்பகையை வளர்த்துக்கொண்டு இரு நாடுகளும் தத்தமது மக்களின் வாழ்வை நிலைகுலையச் செய் வதால் யாருக்குப் பலன் ஏற்படப் போகிறது என்ற கவலை யின் விளைவே இந்தக் கடிதம். எனவே என் வேண்டுகோளை யேற்றுத் தாங்கள் தலையூர் மாளிகைக்கு ஒரு முறை வருகைதர கேட்டுக்கொள்கிறேன். போரைத் தவிர்த்துக்கொண்டு எதிர் பார்ப்புப் பரபரப்புகள் எதுவுமின்றி அமைதியான சூழலில் 396