உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னர்-சங்கர் வீரமலை பொன்னரைப் பார்த்துக் கேட்டான். தலையூர்க் காளியை அவ்வளவு பண்பற்றவனாக நான் கருதவில்லை. தனக்காக இல்லாவிட்டாலும் தனது நாட்டு மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள அவன் ஒருக்காலும் விரும்பமாட்டான்! எதற்கும் இந்த சிக்கலான விஷயத்தில் மாயவர் அவர்களே இறுதி முடிவு எடுக்க வேண்டும்" என்றான் பொன்னர்! அருக் காணித் தங்கம் மெல்லச் சிரித்தாள்; அந்தக் கோபத்திலும்! 44 'என்னம்மா சிரிக்கிறாய்? என்றான் பொன்னர்! "ஒன்றுமில்லையண்ணா! தந்தை குன்றுடையாரைத்தான் எல்லோரும் அவரது வெகுளித்தனத்துக்காக மசச்சாமி என அழைப்பார்கள் - அப்படியே இல்லாவிட்டாலும் அதில் பாதி யளவு என் பெரியண்ணா இருக்கிறாரே என எண்ணினேன்! சிரிப்பு வந்தது!" என்றாள் அருக்காணித் தங்கம். வீரமலையின் கையிலிருந்த கடிதத்தை மாயவர் வாங்கி, அதை ஒருமுறைக்கு இருமுறை தனது மனதிற்குள்ளாகவே படித்துப் பார்த்தார். அங்கு நடைபெற்ற சூடான விவாதத் தில் அவர் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்தார் எனினும் அவரது இதய அலைகள் ஓயவே இல்லை! கடிதம் எழுதப் பட்ட மர்மம் என்னவாக இருக்கும்? அவரால் அதற்கு விடை கண்டு பிடிக்கப்பட்டு விட்டது! தலையூரான் தனது தவறுகளை உணர்ந்திருக்கிறான் - தலையூர் மக்களிடம் நல்ல பெயர் எடுக்க விரும்புகிறான் அவனால் ஒரு பெரிய போர்க்களத்தை சந்திக்க முடிகிறதோ இல்லையோ, இப்போது அதை அவன் விரும்பவில்லையென்று தெரிகிறது! சந்தர்ப்பம் அவனைத் திருந் தச் செய்திருக்கிறது என்றாலும் - அவன் செய்துள்ள பழைய பாபங்களுக்கு எளிதில் யார்தான் மன்னிப்பு வழங்கமுடியும்? ஒருவேளை அவன் நல்ல எண்ணத்துடன் செயல்பட முனைந்து அதையும் தன் சூழ்ச்சிக்குச் சாதகமாகச் செல்லாத்தாக்கவுண் டர் பயன்படுத்திக் கொள்ளத் திட்டம் தீட்டியிருந்தால்? இப் படியெல்லாம் மாயவரின் சிந்தனையோட்டம் பெருகியது. பொன்னர் சங்கரால் மக்களுக்கு நல்லாட்சி தரமுடியும் என்ற உண்மை; நிலைநாட்டப்பட்டு விட்டது. கொங்குக் குல மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் அவர்கள் என்ற நற் பெயரும் வளநாட்டுப் பகுதிகள் அனைத்திலும் பரவிவிட்டது. இனி அவர்கள், தாங்கள் எடுத்த சபதத்தை நிறைவேற்றக் களம் புகுவதால் மக்கள் சலிப்படைய மாட்டார்கள். தன்னை அழைத்துள்ள தலையூர்க்காளிக்கும் தெரியாமல் செல்லாத்தாக் 400